FEATUREDLatestNature

நிறம் மாறும் கொண்டைக் கழுகு

Spread the love

நிறம் மாறும் கொண்டைக் கழுகு

இந்தியாவில் இருக்கும்
முக்கிய அரியவகைக் கழுகுகளில்
( 9 என்கின்றனர் சிலர் )
மிக முக்கியமான ஒன்று
இந்த நிறம் மாறும்
கொண்டைக்கழுகு ஆகும்…

அழிவின் விளிம்பில்
இருப்பதாகவும் வனத்துறையினர் சொல்கிற அரியவகைப் பறவையினம் ஆகும்..

ஆஜானபாகுவான இதன்
உடல் அமைப்பில்
தலையின் பின்புறம் உள்ள
நீண்ட குச்சி போன்ற கொண்டையும்
தலையைத் திருப்புகையில்
அது அசைகிற விதமும்
காண்போரைக்
கவர்ந்திழுக்கச் செய்பவை…

மலைப்பிரதேசங்கள் மற்றும்
சமவெளிக்காடுகளில் காணப்படும்
இவ்வகைப் பறவைகளைக் காத்தல்
மிகவும் அவசியமானதொன்றாகும்…

ஊர்ப்புறங்களில் விவசாய நிலங்களில்
பயன்படுத்தும் நச்சு உரங்களின் பாதிப்புகள் இவ்வகைப்பறவைகள்
வரைக்கும் பரவும் என்பதை
உணர்வோமாக……!

#CHANGEABLE_HAWK_EAGLE💞
#GEDDHAI

கா.ர.ப
Parameswaran Rangaraj 

Leave a Reply