தேன் சிட்டு Sun bird

Spread the love

தேன் சிட்டு Sunbird

உலகில் 172 வகை தேன் சிட்டுகள் காணப்படுகின்றன . இலங்கையில் 4 வகையான தேன் சிட்டுகள் காணப்படுகின்றன.

பெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டது. ஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும். இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆங்கிலத்தில் இதன் பெயர் (Purple-rumped Sunbird)’ என்பதாகும்.

தேன் சிட்டின் கூடு செடிகளின் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்த சரகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத் துண்டுகள் கொண்டு ஒட்டப்பட்டிருக்கும். வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீட்டர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப் பட்டிருக்கும். இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கூட்டிற்குள்ளே செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர் அளவிலான துவாரம் இருக்கும். அந்த துவாரத்திற்கு ஒரு ‘சன் ஷேடும்’ அமைக்கப் பட்டிருக்கும். கூட்டின் கீழ் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சரகுத் துண்டுகள் தொங்கிக் கொண்டு இருக்கும். கூட்டினைக் கட்டுவது பெண் குருவியே. ஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூடக் கூட பறந்து கொண்டிருக்கும். கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும்.

தேன் சிட்டில் நீண்ட அலகு காணப்படுவதுடன் நீண்ட நாக்கும் காணப்படுகின்றது . இது பூக்களில் இருந்து மதுரத்தை உறிஞ்சிக்கொள்வதற்கு ஏற்றவாறு அமையப்பெற்றுள்ளது. சில பூக்களில் மதுரத்தை எடுக்க முடியாத சந்தர்ப்பத்தில் பூவில் மதுரம் காணப்படும் இடத்திற்கு அண்மையில் துளையை ஏற்படுத்தி மதுரத்தை பெற்றுக்கொள்கின்றன.

இவை பூக்களில் காணப்படும் மதுரத்தை பிரதான உணவாக உட்கொள்கின்றன . இருப்பினும் தமது குஞ்ஞகளுக்கு உணவளிக்கும் போது சிறிய பூச்சிகள் மற்றும் சிலந்திகளை உணவாக உட்கொள்கின்றன.

சாதாரனமாக தேன் சிட்டு ஒன்று சிறகடித்துக்கொண்டு பூக்களில் இருந்து மதுரத்தை எடுக்கும் போது அதன் இதயத்துடிப்பு வீதம் ஒரு நிமிடத்திற்கு 500 தடவைகளை அண்மிப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. உலகில் உள்ள மிகச் சிறிய தேன் சிட்டு Bee hummingbird இதன் இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 1000 தடவைகளை அண்மைிப்பதாக நவீன தொழினுட்பதினூடாக கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.facebook.com/Creative-Eye-1049832038527415/

Leave a Reply