தென்னிந்தியாவின் நயாகரா

Spread the love

தென்னிந்தியாவின் நயாகரா…!
***********************************

இந்திய சினிமாவை அதிகம் ஆக்கிரமித்த அருவி என்றால் அது தென்னிந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிதான்.

கேரளாவின் சாலக்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் வனத்தினுள் பாயும் பிரமாண்டமான அருவி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.

Adhirapalli

அருவிக்கு செல்லும் சாலையில் பல தங்கும் விடுதிகள் இருந்தாலும் அருவியின் அரை கிலோமீட்டர் முன்பு இருக்கும் ஆம்பாடி கெஸ்ட் ஹவுஸில் தங்குவது மிகவும் சிறப்பு.

km

இங்கிருந்து அருவியின் முழு அழகையும் ரசிக்கலாம். தங்கும் அறையின் ஜன்னலை திறந்தால் அருவி நம் கண்முண்ணே ஓர் திரைப்படத்தின் காட்சிபோல விரியும்.

இரவின் அமைதியும், நிலவின் வெளிச்சத்தில் இரு வெள்ளி கோடுகளாய் சற்று தூரத்திலேயே அருவியின் ஏகாந்தமும் மனதை கொள்ளை கொள்ளும்.

 

ஆம்பாடி தங்கும் விடுதியின் வாடகையும் மிக மலிவாய் இருக்கிறது. ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கான பேமிலி ரூம் வெறும் 750 ரூபாய்க்கு கிடைக்கிறது.

15 பேர் தங்கும் அளவிலான டார்மெண்டரி வாடகை 1000 ரூபாய்தான். இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் அந்த விடுதியை நடத்தி வரும் பரமேஸ்வரனும் அவர் மனைவியும் சுவையாக சமைத்து தருகிறார்கள். கேரளத்தின் புட்டு, அப்பம் கடலைகறி, கல்தோசை சட்டினி, சம்பா அரிசி சோறு-மீன்கறி என்று சமைத்து தந்து அசத்துகிறார்கள். உணவிற்கும் நியாயமான விலையே வாங்குகிறார்கள்.

அதிரப்பள்ளி செல்பவர்கள் ஆம்பாடியில் தங்கி அருவியை ரசித்து வாருங்கள். அந்த நாட்களை வாழ்வில் மறக்க மாட்டீர்கள்.

Pasumai shahul