தூக்கணாங்குருவி

Spread the love

தூக்கணாங்குருவி

தூக்கணாங்குருவி ஊர்க்குருவி வகையினை சார்ந்தது இது பார்ப்பதற்கு ஊர்க்குருவி போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்த தூக்கணாங்குருவி யை சின்னம், சிதகம், மஞ்சள் குருவி, மஞ்சள் சிட்டு போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தூக்கணாங்குருவிகள் இந்தியா முழுவதும் பரவலாக வாழும் குருவி வகைகளும் ஒன்று. இக்குருவிகள் தெற்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகின்றன.

தூக்கணாங்குருவி யை சின்னம், சிதகம், மஞ்சள் குருவி, மஞ்சள் சிட்டு போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

 

தூக்கணாங்குருவியின்  உருவ அமைப்பு

தூக்கணாங்குருவிகள் பழுப்பு நிற உடலில் அடர் பழுப்பு நிறத்தில் வரிவரியான பட்டைகள் ஆக காணப்படும். இவை ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறத்தையும் கொண்டிருப்பதால் எளிதாக இனம் பிரிக்க இயலாது. ஆனால் இதனுடைய இனப்பெருக்க காலங்களில் மட்டும் ஆண் தூக்கணாங்குருவியின் உச்சந்தலை, மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் இறகுகளில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.


உணவு 

தூக்கணாங்குருவிகள் தானியங்களை உண்ணுவதற்கு ஏதுவாக அதன் அழகு கூம்பு போன்று அமைந்திருக்கும் இக்குருவிகள் பெரும்பாலும் கம்பு சோளம் மற்றும் தினை போன்ற தானியங்களை உணவாகக் கொள்ளும் .இருப்பினும் தூக்கணாங்குருவிகள் குஞ்சு பொரிக்கும் காலங்களில் பூச்சிகளை உணவாக உட்கொண்டு குஞ்சுகளுக்கும் உணவு ஊட்டும்.


தூக்கணாங்குருவியின் கூடு அமைக்கும் பண்பு

தூக்கணாங்குருவியின் கூடு அமைக்கும் பண்பானது மிகவும் சிறப்பு வாய்ந்தது இவற்றின் கூடுகள் பெரும்பாலும் பனைமரங்கள், ஈச்ச மரங்கள், கருவேல மரங்கள், அடர்ந்த செடிகள் வளர்ந்து கிடக்கும் கிணற்றுப் பகுதிகள் போன்றவற்றில் பார்க்கலாம். தூக்கணாங்குருவிகள் இவ்வாறு கூடு அமைப்பது முட்டைகளையும், குஞ்சுகளையும் பிடிக்க வரும் இரை கொல்லி விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காக.

தூக்கணாங்குருவிகளில் ஆண் இனம் மட்டுமே கூடு கட்டும் ஆண் குருவி கட்டிய கூட்டினை பெண் குருவிகள் வந்து பார்வையிட்டு தமக்குப் பொருத்தமான கூட்டினை கட்டிய ஆண் குருவியுடன் இணை சேர்ந்து கூட்டினுள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

தூக்கணாங்குருவிகளில் ஆண் இனம் மட்டுமே கூடு கட்டும் ஆண் குருவி கட்டிய கூட்டினை பெண் குருவிகள் வந்து பார்வையிட்டு தமக்குப் பொருத்தமான கூட்டினை கட்டிய ஆண் குருவியுடன் இணை சேர்ந்து கூட்டினுள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

ஒரு மரத்தில் நாம் பல தூக்கணாங்குருவி கூடுகளை காணலாம் சற்று கூர்ந்து கவனித்தால் கூடுகளின் எண்ணிக்கை மரத்தின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும் இவ்வாறு கூடு கட்டுவதற்கு காரணம் என்னவென்றால் கூட்டினுள் உள்ள முட்டைகள் காற்று வீசும்போது வெளியில் விழாமல் இருப்பதற்காக மேலும் கூட்டில் குழாய் போன்ற நீண்ட அடிப்பகுதி ஆனது காற்று வீசும் திசைக்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும்.

நைட் லாம்ப்

அடைகாத்து குஞ்சு பொரித்த பின்னர் இக் குருவி ஈரத்தன்மை உள்ள களிமண்ணைக் கொண்டு வந்து கூட்டிற்குள் ஒட்டிவிடும் இதன்பின்னர் இரவு நேரங்களில் தனது கூட்டிற்குள் குஞ்சுகளுக்கு வெளிச்சம் தருவதற்காக மின்மினி பூச்சிகளை பிடித்துக்கொண்டு வந்து களிமண்ணில் ஒட்டிவிடும், குஞ்சு பொரித்தவுடன் பெண்குருவி மட்டுமே குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் மிக அரிதாகவே ஆண் குருவிகள் உணவு ஊட்டும்.

 

பறவைகள் பற்றிய ஆவண படம் எடுப்பதற்காக நான் வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தேன். அப்போது தூக்கணாங்குருவி கூடு கட்டுவதை பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இயற்கையை நேசிப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் 

R. சுந்தர்ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *