FEATUREDSocialmedia

துணி துவைக்க இயற்கை திரவம் தயார்

Spread the love

துணி துவைக்க இயற்கை
(liquid) திரவம் தயார்..

தொலைகாட்சி பெட்டி வருதற்கு முன்பெல்லாம் துணி துவைத்த தண்ணீரில் மீன்கள் வாழ்ந்தது..
பாத்திரம் துலக்கும் தண்ணீரில் வரும் உணவை உட்கொண்டு குறுவிகளும் பல பறவை இனங்களும் வாழ்ந்துவந்தது..

தொலைகாட்சி பெட்டி வந்தவுடனேயே இந்த உயிரினங்கள் படிப்படியாக அழிந்து குறைந்தது போனது.
காரணம் அதில் வரும் விளம்பரங்களை நம்பி அதிகப்படியான ரசாயன கலந்த கட்டிகளை நாம் வாங்கி பயன்படுத்தியதால் இப்போது நீரும் மாசடைந்து, அந்த நீர் அப்படியே ஆற்றிலும் குளத்திலும் கலந்து இப்போது கழிவுநீர் தேக்கங்கலாகவும்,
கழிவுநீர் ஓடைகளாககவுமே மாறிப்போய் மரணித்து விட்டது..

ரெண்டு வருஷத்துக்கு முன்பே முகநூலில் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
எங்கள் வீட்டுக்கு துணி துவைக்கும் இயந்திரம் வந்ததிலிருந்து நாற்பது வயதுடைய மாமரம் காய்ப்பதில்லைனு..

நாட்டு வைத்தியம் என்னென்னமோ செஞ்சு ஒன்னும் கதைக்கு ஆகல..
ஒன்னொன்னா யோசிச்ச போதுதான் கடைசியில் தெரிந்தது அந்த இயந்திரத்துக்கு அன்றாடம் நாங்கள் பயன்படுத்திய நச்சு கலந்த சோப் பவுடர்தான் அந்த மாமரதத்தை மலடாக்கியது என்று..

அதன் பிறகு தீவரமா தேடியதில் கிடைத்ததுதான் இந்த ” பூந்திகொட்டை “..
நகைபட்டரையில் தங்க நகைகளை சுத்தம் செய்ய இந்த பூந்திகொட்டையைத்தான் பயன்படுத்துகின்றனர்..

#செய்முறை..

இந்த பூந்திகொட்டை நாட்டு மருந்து கடைகளிலில் கிலோ 80 ரூபாய்க்கு முதல் கிடைக்கிறது.
அதை வெயிலில் நன்கு காய வைத்து,
ஒல்லில் இடித்து,
பிறகு மிக்சியில் அரைத்து,
ஒரு லிட்டர் தண்ணீரில் ஐம்பது கிராம் பூந்திகொட்டை தூளை சில்வர் பாத்திரத்தில் கலக்கி ஒரு வாரம் வெயிலில் காய வையுங்கள்..
(இதற்கு மழை நீரை நான் பயன்படுத்துகிறேன்.
நீங்கள் எந்த நீரை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்..)

அதன் பிறகு பாட்டிலில் ஊற்றி
நன்கு குளுக்கி துணிதுவைக்கும் இயந்திரத்தில் வடிகட்டி இருநூற்று ஐம்பது மில்லி வீதம் ஊற்றுங்கள்.. (இருபதுநாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்..)

இயந்திரம் தண்ணீர் எடுத்தபிறகு பத்து நிமிடம் நிறுத்தி வையுங்கள்.
இப்படி செய்யும் போது துணி நன்கு ஊறிவிடும்.
அதன் பின் இயந்திரத்தை ஓடவிடுங்கள்..
பிறகு வெண்மையை பாருங்கள் இயற்கை நறுமனத்துடன்..

இதே முறையை கையில் துவைப்பவர்களும் பயன்படுத்தலாம்..

நேரம் செலவாகுதுனு எல்லாம் பார்க்காதீங்க..
சத்தியமங்கல பகுதி ஒரு கிராமத்தில் வாழம் திரூமூர்த்தி ங்கிற என்னாலே முடியும் போது,
உங்களால முடியாதா?

தொல்லைகாட்சி பெட்டியில் கண்ட கண்ட ஆட்டக்காரிகள் ஆடி வந்து நம்மை ஏமாற்றியதால் தான்
நச்சுக்களை எல்லாம் பயன்டுத்தி இப்போ இயற்கையை அழித்து மருத்துவமனைக்கு படை எடுத்துட்டு லட்சம் லட்சமா கப்பம் கட்டீட்டு இருக்கோம்..

இதை நான் #விற்பனைக்குக்கு தயார் செய்யல..

உங்களுக்கு பயன்படுமேனுதான் பகிர்ந்திருக்கேன்..
நீங்களே தயாரிச்சு சுயசார்போட வாழத்தான் இந்த வழியை சொல்கிறேன்..

நதிகளை இணைக்கிறது,
அண்டை மாநிலத்தாத்துகாரர்களிடம் தண்ணீருக்காக கையேந்துவது,
இதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்..

இப்போ ஓடுகிற தண்ணி 70 சதவீதம் நச்சுஆலைகளால் மாசைடையுதுனா,
மீதி 30 சதவீதமும் நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் நச்சு கழிவுகளால்தான் ஆகிறது என்பதை நன்கு உணர வேண்டும்.

இப்போ மாற்றத்தை நம்ம வீட்டிலிருந்து ஆரம்பிப்போம்..
கெட்டுப்போன முப்பது சதவீதத்தை மீட்டாலே இந்த நூற்றாண்டில் நாம செய்த பெரும் சாதனையாகிடும்..

நல்ல ஆடைகளையும்,
ஆபரணங்களையும்,
அடுக்குமாடி வீடுகளையும்,
விலை உயர்ந்த மகிழ்வுந்துகளையும்,
பணத்தையும்,
கல்வியையும் மட்டும் நம் பிள்ளைகள் கொடுத்துட்டு போனா நம்ம பிள்ளைகள் நல்லா வாழாது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டா இயற்கையை சூரையாடி, பல்லுயிர்களோட சாபத்துக்கு
நாம ஆளாகியிருக்கோம்..

அந்த சாபத்தை போக்கனும்னா
இயற்கைக்கு திரும்புகிற
பரிகாரத்தை செய்து
இம்மண்ணில் பல்லுயிர்களும்
வாழ விட்டாத்தான்
நம்ம அடுத்த சந்தததியும் வாழ
முடியும்னு மனசில
ஒரு ஓரமா வச்சுக்கோங்க..

நன்றி..

நஞ்சற்ற மஞ்சள்தூள் தேவைபடுவோர் கீழே உள்ள லிங்க்கை பார்க்கவும்..

https://m.facebook.com/story.php?story_fbid=1640256269425685&id=100003239826387

Leave a Reply