தினம் ஒரு பறவை – பஞ்சுருட்டான்கள்
தினம் ஒரு பறவை – பஞ்சுருட்டான்கள்
by: Kalai Selvan
பஞ்சுருட்டான்கள் (Bee-eaters)
இந்த விடுமுறையில் பறவைகளைப் பற்றிய செய்திகளை நான் எடுத்த படங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இன்று பஞ்சுருட்டான்கள் (Bee-eaters) பற்றிச்சொல்கிறேன். நான் அடிக்கடி படம் பதிவிடும் காந்தக்கண்ணழகிதான் இவை. மை தீட்டிய மங்கையைப் போல் கொள்ளை அழகாயிருக்கும் இந்தக் குருவி. அதனால்தான் நான் அந்தப் பெயர் வைத்திருக்கிறேன்..(பார்க்க

நம் தமிழகத்தில் ஐந்துவகையான பஞ்சுருட்டான்களைக் காண இயலும்.
1.காட்டுப்பஞ்சுருட்டான்(Bl
2.நீல வால் பஞ்சுருட்டான் ( Blue -tailed bee-eater)
3.செந்தலைப்பஞ்சுருட்டான் ( chesnut -headed bee-eater)
4.பச்சைப்பஞ்சுருட்டான் (Small Green bee-eater)
5.ஐரோப்பியப் பஞ்சுருட்டான் (European bee-eater)
(அம்மாடியோவ்! சில வருசத்துக்கு முன்னாடி ஏதோ பச்சைக் குருவின்னு மட்டுமே தெரியும்! )
இப்போ இவற்றை அடையாளம் காண்பது எப்படின்னு பார்ப்போம்!
பெரும்பாலும் நம் கண்களில் படுபவை பச்சைப் பஞ்சுருட்டான்கள் (Small Green bee-eaters) ஆகும்..ஏனெனில் இவை சமவெளிகளில் உள்ள மரங்கள், மின் கம்பிகளில் சுற்றித்திரிவதைக் காணலாம்.காடு, அதனை ஒட்டிய பகுதிகள் , வயல்களில் காணலாம்.கண்டம் விட்டு கண்டம் வருபவை ஐரோப்பிய பஞ்சுருட்டான்கள். பருவத்திற்கேற்ப இடம் பெயர்பவை நீல வால் பஞ்சுருட்டான்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படுபவை காட்டுப்பஞ்சுருட்டான்களும்
செந்தலைப் பஞ்சுருட்டான்களுமாகும்.
அடையாளம் காண்பது எப்படி
பெயருக்கேற்றபடி காட்டுப் பஞ்சுருட்டானில் “blue beard’ed” அதாவது அலகின் கீழ்பகுதி முதல், நெஞ்சு வரை ஒரு நீல நிற கோடு வரும்…இதனையே கருத்தில் கொண்டு “நீல தாடி” என்னும் பொருள் வரும் வகையில் அமைத்துள்ளனர்.மற்றபடி இவற்றின் உடல் முழுவதும் பச்சை நிறம்தான்.

நீல வால் பஞ்சுருட்டான் ( Blue -tailed bee-eater)
அதேபோல் நீல வால் பஞ்சுருட்டான் வாலில் நீலநிறம் கொண்டது. செந்தலைப் பஞ்சுருட்டான் சிவந்த தலை உடையது.இரண்டிற்கும் அலகிற்குக் கீழ் மஞ்சள், அடர் சிவப்பு நிறங்கள் இருக்கும் எனினும் செந்தலைப் பஞ்சுருட்டானுக்கு சரியாக கழுத்துப் பகுதியில் அடர் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு போன்ற பகுதியும், நீல வால் பஞ்சுருட்டானுக்கு மஞ்சள் வண்ணம் குறைவாயும், அடர் சிவப்பு அதிகமாயும் இருப்பதைக் காணலாம்..

செந்தலைப்பஞ்சுருட்டான்



பச்சைப் பஞ்சுருட்டான்
பச்சைப் பஞ்சுருட்டான் அலகின் கீழ்ப்பகுதியில் (கடல்) நீல நிறம் காணப்படும்.வாலில் தனித்த அழகிய கம்பி போன்ற அமைப்பு இருக்கும்.









பச்சை பஞ்சுருட்டான் பற்றி மேலும் அறிய
ஐரோப்பியப் பஞ்சுருட்டான்
ஐரோப்பியப் பஞ்சுருட்டானுக்கு மிக மிக குறைந்த நீளமுள்ள கம்பி வாலும், கழுத்துமுதல் வால் வரை சீரான வெளிர் நீல நிறம், கழுத்தின் மேல் முதல் அலகு வரை பளிச்சென்ற மஞ்சள் இருக்கும்..(மேலும் விளக்கத்திற்கு கட்டுரையைப் படித்துவிட்டு படங்களை உற்று நோக்கவும்)

இவை குழுவாய் வசிப்பவை..
பெயருக்கேற்றபடி இவை ஈ,தேனீ,தும்பி,குளவி,வண்டு போன்றவற்றை உட்கொள்ளும்.
இன்னொரு சுவாரசியமான விஷயம்..இவை நீங்கள் நினைப்பது போல் கூடு கட்டுபவை அல்ல..செங்குத்தான மண் சுவர்களில் சிறு மண் பொந்துகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை ஆகும்.இவை போன்ற ‘வங்குகள்’ பெரும்பாலும் நீர்நிலை அருகில் இருப்பதை நீங்கள் காணலாம்
பச்சைப் பஞ்சுருட்டான்கள் (Small Green bee-eaters)
பெரும்பாலும் நம் கண்களில் படுபவை பச்சைப் பஞ்சுருட்டான்கள் (Small Green bee-eaters) ஆகும்..ஏனெனில் இவை சமவெளிகளில் உள்ள மரங்கள், மின் கம்பிகளில் சுற்றித்திரிவதைக் காணலாம்.காடு, அதனை ஒட்டிய பகுதிகள் , வயல்களில் காணலாம்.கண்டம் விட்டு கண்டம் வருபவை ஐரோப்பிய பஞ்சுருட்டான்கள். பருவத்திற்கேற்ப இடம் பெயர்பவை நீல வால் பஞ்சுருட்டான்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படுபவை காட்டுப்பஞ்சுருட்டான்களும்
ட்ரி…ட்ரி…ட்ரி…என ஒலியெழுப்பியபடி பறந்தபடி இரையை லாவகமாய்ப் பிடித்து எங்கிருந்து கிளம்பி வந்ததோ பெரும்பாலும் அதே கிளையில் அமர்ந்து பொறுமையாய் விழுங்குவதைக் காணலாம்..
அலகில் பற்றியுள்ள இரையை ஒன்றிரண்டு முறை கிளைகளில், அல்லது கம்பிகளில் சாத்துவதைப் பார்த்திருக்கிறேன்..இரையை உயிரிழக்கச் செய்யும் முயற்சி அல்லது, இலகுவாக விழுங்க வசதியாய் அவ்வாறு செய்யலாம் எனக் கருதுகிறேன்..பெரிய வண்ணத்துப் பூச்சியைக் கூட விழுங்கும் காட்சியைப் பார்த்துள்ளேன்..
இன்னொரு சுவாரசியமான விஷயம்..இவை நீங்கள் நினைப்பது போல் கூடு கட்டுபவை அல்ல..செங்குத்தான மண் சுவர்களில் சிறு மண் பொந்துகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை ஆகும்.இவை போன்ற ‘வங்குகள்’ பெரும்பாலும் நீர்நிலை அருகில் இருப்பதை நீங்கள் காணலாம்…
படித்தவுடன் நண்பர்களுடன் பகிரவும்..
அடுத்த கட்டுரையில் வேறொரு பறவை இனத்துடன் சந்திக்கலாம்..
அன்புடன்,
– கலை