FEATUREDLatestTechnologyஅறிவியல்

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் James web telescope

Spread the love

இன்று அனுப்ப வேண்டிய ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை,

டிசம்பர் 24 தேதி ஒத்திப் போட்டு பின் வானிலை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அனுப்ப போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு அனுப்பி பிரபஞ்சம் பற்றிய பல தகவல்களை சொன்ன ஹபிள் டெலஸ்கோப் பூமியில் இருந்து 547 கிலோமீட்டர் தூரத்தில் நின்று பிரபஞ்சத்தை பார்த்தது.

ஆனால் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் 15 லட்சம் கிலோமீட்டர்கள் உயரத்தில் பறந்து பிரபஞ்சத்தைப் பார்க்கப் போகிறது.

547 க்கும் 15 லட்சத்துக்குமான உயர அளவு வேறுபாடு என்பது தக்கனூண்டு இருக்கும் ஒரு மில்லிமீட்டருக்கும் இரண்டரை மீட்டர் உயரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.

இதுவரை நாம் பார்த்த பிரபஞ்சத்தை இன்னும் 2500 மடங்கு உயரம் போய் பார்க்கப் போகிறோம்.

இதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் கிறிஸ்துமஸ் அன்று பதினைந்து லட்சம் கிலோமீட்டர் உயரம் போய் நிற்கப் போகும் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில் வேறு எதாவது ரிப்பேர் என்றால் அதை சரி செய்யவே முடியாது. அனுப்பினால் அனுப்பியதுதான்.

மேலே 15 லட்சம் கிலோமீட்டர் எல்லாம் போய் சரி செய்ய முடியாது. ( பூமியிலிருந்து நிலாவின் தூரத்தை விட மூன்றரை மடங்கு அதிகம்)

இதற்கு முன்பு அனுப்பிய ஹபிள் டெலஸ்கோப் அனுப்பி முதல் நான்கு வருடம் சரியான படங்களை அனுப்பவில்லை. அதை மறுபடி திட்டமிட்டு சரி செய்து உபயோகப்படுத்தினார்கள்.

ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை ஒன்ஸ் அனுப்பினால் அனுப்பியதுதான்.

ஒருவேளை எல்லாமே சரியாக அமைந்தால் நாம் வேறு லெவலில் பிரபஞ்ச உண்மைகளை கண்டு அறிந்து அந்த செய்திகளை படித்து மகிழலாம்.

கிறிஸ்துமஸ் அன்று நல்லது நடக்கட்டும்.

விஜய் பாஸ்கர்விஜய்

Leave a Reply