LatestNatureTOP STORIES

செந்நாரை Purple Heron – Ardea purpurea

Spread the love

செந்நாரை  Purple Heron 
Sholinganallur

By: https://www.facebook.com/paneer.selvam.16
செந்நாரை (Purple Heron, Ardea purpurea) உயரமாக வளரக்கூடிய ஒரு நீர்நிலை அருகில் வாழும் நீரைச்சார்ந்த பறவையினம். இவற்றின் தனித்தன்மையான உயரமும், வண்ணங்களும் இவற்றை பறை சாற்றுகின்றன. தன் இனப்பெருக்க எல்லைக்கு வடபுறம் மிகவும் அரிய அளவில் செல்கின்றன.
ஜம்பு நாரை என்பது இதன் வெறு பெயராகும்.
உயர்ந்து வளரும் பறவையினமான செந்நாரை ஒரு மிகப்பெரிய பறவை. 78-98 செ.மீ. நீளம் கொண்ட இவை நிற்கும் வேளையில் 70-94 செ.மீ. உயரமும், 120-152 செ.மீ. இறகின் அகலமும் கொண்டுள்ளன.எனினும் இவை மிகவும் ஒல்லியாக இருப்பதனால் இது வெறும் 0.5-1.35 கிலோகிராம் அளவே உள்ளது.
இது சாம்பல் நாரையை விடவும் சிறியதாகவும் இலேசாகவும் உள்ளது. இதனை சாம்பல் நாரையிடமிருந்து வேறுபடுத்திக்கட்டுவது யாதெனின் இதன் இள்ஞ்சிவப்பு நிற உடலே. வளர்ந்த பறவைகள் கருத்த பழுப்புநிறத்தையும் கொண்டிருக்கின்றன. இவை குறுகிய வடிவிலான மஞ்சள் அலகினை உடையது. செந்நாரைக்கு உருவத்தில் மிகவும் அருகாமையில் உள்ள நாரை இவற்றை விட உருவில் பெரிய கோலியாத்து நாரை.

தொகு
இவை ஆப்பிரிக்காவிலும், மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும், தென் மற்றும் கிழக்கு ஆசியாவிலும்வாழ்கின்றன. எனினும் ஐரோப்பிய இனங்கள் குளிர் காலங்களில் ஆப்பிரிக்காவை நோக்கி வலசைவருகின்றன. ஆசிய இனங்களோ வடக்கும் தெற்கும் ஆசியாவிற்குள்ளேயே வலசை வருகின்றன.
இவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான “S” வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக அமைதியான இவ்வினம் தவளையைப்போல் “க்ரேக்” என்ற ஒலியினை எழுப்பும்.

Leave a Reply