சுண்டைக்காய்

Spread the love

#சுண்டைக்காய்
#Turkey_berries

சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.

சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்.

#அகத்தியர்_பாடல்

“நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம் – வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்”

என்று சுண்டைக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாட பாடலில் கூறப்பட்டுள்ளது.

சுண்டைக்காய் வற்றல் பற்றி மற்றொரு வெண்பா

பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும்
உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.
Source:wiki
மருத்துவர் கிஷோர் ரெங்கராஜ்