சிவப்பு நரிகளின் இனச்சேர்க்கை – mating of redfox – vulpes vulpes

Spread the love

சிவப்பு நரிகளின்( உயிரியல் பெயர் Vulpes vulpes) இனச்சேர்க்கை

Mating of Red Fox
by : Nara Simhan 

பனிச் சிறுத்தைகள்(Snow Leopard) வழக்கமாக மாலை அல்லது இரவு வேளைகளில் வேட்டையாடும். காலை நேரங்களில் அவை ஒரு குகை அல்லது மலை அடிவாரத்தில் தன்னுடைய வேட்டையாடிய உணவோடு அமர்ந்திருக்கும்.

அந்த உணவை உண்டு முடிக்க அதற்கு ஓரிரு நாட்கள் தேவைப்படும் . அந்த தருணத்தில் அவை எங்கும் செல்லாது. காலையில் தூங்கிக்கொண்டிருக்கும். அவ்வப்போது எழுந்து சென்று அந்த உணவை சிறிது புசித்துவிட்டு அமர்ந்து கொள்ளும்.

அதுபோன்ற வேளையில் தான் அந்த பனி சிறுத்தையை காண நேர்ந்தது.
இரவு வேட்டைக்குப் பின் அந்த பனி சிறுத்தை தன்னுடைய உணவோடு ஒரு மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது. நான் சற்றும் உயரத்திலே காலை முதல் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சற்றே சற்று தூரத்தில் இரண்டு சிவப்பு நரிகள் இனசேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அவைகள் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இனச்சேர்க்கை செய்து கொண்டிருந்தது.

மனிதர்களைத் தவிர அனைத்து விலங்கினங்களும் தன்னுடைய இன சேற்கையை தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்கின்றன.

ஒரே வகையான விலங்கினங்கள்(same species ) கூட மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலைகளின் இருக்கும்போது அதனுடைய சேர்க்கைக்கான காலமும் வேறுபடுகின்றது . உதாரணத்திற்கு அசாம், குஜராத் , மத்திய இந்தியகாடுகளில் இருக்கும் மயில்கள் வெவ்வேறு காலங்களில் இனச்சேர்க்கை ஈடுபடுகின்றனர்.

இந்த இன சேர்க்கை காலமானது தன்னுடைய குட்டிகளுக்கு அல்லது குஞ்சுகளுக்குகான உணவு அதிக அளவில் வாய்ப்புள்ள காலத்தையே ஒட்டியிருக்கும்.

இதன் அடிப்படையில்தான் சிவப்பு நரிகளின் இனசேர்க்கையும் நடைபெறுகின்றது. குளிர்காலத்தில் இனசேர்க்கையும், கிட்டத்தட்ட 50 நாட்கள் பிறகு வெயில் காலத்தில் குட்டிகளும் ஈன்றெடுக்கப்படுகின்றன. இந்த வெயில் காலங்களில் குட்டிகளுக்கு உணவு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதே இதற்கு காரணம் .இது ஒரு காலத்தின் கட்டாயம்.

இது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம்.

Nara Simhan 

Leave a Reply