சிறுத்தை – Leopard

Spread the love

சிறுத்தை குறித்த தகவல் தொகுப்பாய் இதைப் பதிவிட இயற்கையைப் பேணுதல் என்பதைத்தவிர வேறு நோக்கம்
ஏதும் இல்லை.

பூனைப் பேரினத்தின் உறுப்பினரும் பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனமும் ஆகும்.
ஏனையவை சிங்கம், புலி, ஜாகுவார் என்பனவாகும். சிறுத்தைகள் ஒரு காலத்தில் சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையுள்ள கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் பரந்திருந்தன.
ஆனால் வேட்டையாடுதல்,
வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் அவற்றின் பரவல் விரைவாகக் குறைவடைந்துள்ளது.
இவை தற்போது உப சகார
ஆப்பிரிக்கப் பகுதிகளிலேயே
பிரதானமாகக் காணப்படுகின்றன.
மேலும் இந்தோனேசியா,
இந்தியா,
பாகிஸ்தான்,
இலங்கை,
இந்தோசீனா,
மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறிய அளவில் காணப்படுகின்றன.

இவற்றின் பரவல் மற்றும் தொகை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய பூனைக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் சிறுத்தை ஒப்பீட்டளவில்
சிறிய கால்களையும்,
பெரிய மண்டையோட்டுடன் கூடிய நீண்ட உடலையும் கொண்டிருக்கும்.
தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக் கொண்டிருக்கும். ஜகுவாரின் உடலில் காணப்படுவதைப் போன்றே சிறுத்தையின் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். எனினும், சிறுத்தையின் தோலிலுள்ள அடையாளங்கள் மிகவும் சிறியனவாயும் மிகவும் நெருக்கமாகவும் இருக்கும். மேலும் ஜாகுவார்களுக்கு உள்ளதைப் போன்று மையத்தில் புள்ளிகளும் காணப்படாது.
கருமை நிறமான சிறுத்தைகளும் ஜாகுவார்களும் கருஞ்சிறுத்தைகள்
(black panthers) என அழைக்கப்படுகின்றன.
சூழலுக்குத் தக்கதான வேட்டையாடும் தன்மை, வாழ்விடத்துக்குத் தக்கபடி இசைவாகும் தன்மை,
58 kilometres per hour (36 mph)ஐ நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடிய தன்மை,
பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றல், மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது.

சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். இதன் வாழ்விடங்கள் மழைக்காடுகளில் இருந்து பாலைவனப் பகுதிகள் வரை வேறுபடுகின்றது.

இந்தியச் சிறுத்தை என்பது
(Indian leopard, Panthera pardus fusca) இந்தியத் துணைக்கண்டத்தில் பரந்து வாழும் சிறுத்தைத் துணையினமாகும். வாழிடம் இன்மை,
இடப்பற்றாக்குறை,
களவாடப்படல்,
தோலிற்காகவும் உடலுறுப்புக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற காரணங்களினால்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தையினத்தை 2008 ஆம் ஆண்டில் அருகிய இனம் எனப் பட்டியல் படுத்தியுள்ளது.
ஆசியச் சிங்கம்,
வங்கப்புலி,
பனிச்சிறுத்தை,
படைச்சிறுத்தை ஆகியவற்றுடன்
இந்தியச் சிறுத்தையும் இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளுள் ஒன்றாகும்.

அழிவுகள்
வனவிலங்கு வர்த்தகம் இந்தியச் சிறுத்தைகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. இவ்விந்தியச் சிறுத்தைகளின் தோல் மற்றும் சில உடல் உறுப்புக்கள் இந்தியாவிலிருந்து நேபாளம், சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு களவாடப்படும் இந்தியச் சிறுத்தைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 2845 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.

நேபாளத்தில் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வரை 243 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.

சீனா மற்றும் திபெத்இல் 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கம் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 774 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.

களவாடத்தான் இயற்கையைப் படைத்தானா
கடவுள் ?
அல்ல…!
சந்ததிகளுக்கு வெறும் படங்களில் மட்டுமே
நாம் சுட்டிக்காட்டும்படியான
கொடுமையை உண்டாக்கிவிடாமல்
அவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கான
வழிவகைகளுக்குக் குரல் கொடுப்போம்…

உணவுச்சங்கிலியில் ஒரு உயிர் அறுந்துவிட்டால் அதன் தாக்கம் மனிதன் வரைக்கும் நீண்டு தாக்குமென்பதை உணர்வோம்…

இயற்கைச் சமநிலையின் சங்கிலிகள்
அறுபடாமல் பார்த்துக்கொள்வதின் ஆழத்தில் நாமும் அறுபடாமல் பயணிக்க வேண்டியதன் அவசியமும் தேங்கியிருக்கிறது….

#வனம்_காப்போம்
#வனவுயிர்_காப்போம்..!
#bandipur_days

கா.ர.ப🐾

Leave a Reply