சாதி புத்தி

Spread the love

பணக்காரனுக்கு பணம் இருக்கு என்பதே ஒரு comfort. செலவு பண்ணனும். அனுபவிக்கனும் என்று கூட அவசியமில்லை. அதே போல தான் சாதியும். ஆதிக்க சாதியாக இருப்பதே ஒரு comfort.

பிற சாதிகளை அடக்கவேண்டும், ஒடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்ததாலேயே சில வசதிகள் உண்டு.

பள்ளிச் சான்றிதழில் சாதி இருப்பதால்தான் சாதி ஒழியவில்லை, பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ”தீண்டாமை என்பது குற்றம்” என்று சொல்லி நாம் தான், தீண்டாமையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்துகிறோம் என்றெல்லாம் யோசித்துக்கொள்ளும் luxury அதில் ஒன்று.

ஆனால் ஒடுக்கப்படும் சாதிக்கு, இந்த comfort, luxury கிடையாது. இவன் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே, பாடப்புத்தகத்தை கையால் தொடுவதற்கு முன்பே, தம்மைக் கண்டவுடன் ஏன் கொஞ்சம் விலகி நடக்கிறார்கள் என்று உணரும்போதே தீண்டாமை புரிந்துவிடும்.

அப்பாவை இவன் வயதே உள்ள ஒருத்தன் வாடா போடா என்று பேசுகிறானே அது எப்படி என்ற சந்தேகத்தில் சாதி ஆதிக்கம் தெரிந்துவிடும்.

கல்லூரிக்கெல்லாம் போகத் தொடங்கி சமூகம் என்னவென்று புரிந்து, இவன் யார் என்ற எதார்த்தம் புரிந்தும்கூட, சென்றிருக்கும் நண்பன் வீட்டில் திடீரென யாராவது சாதி என்ன என்று கேட்டுவிடுவார்களோ என்று பதறும்போது ஒரு கசப்பு வரும் பாருங்கள். இவனுக்கு அப்போது புரியும் comfort, luxury என்றால் என்னவென்று.

நண்பன் வீட்டிலுள்ள கிழவி, தலை கலைந்திருக்கும் நண்பனை, ”என்னடா பற கம்மனாட்டி மாதிரி இருக்க” என்று கேட்கும். என்னதான் இவன் செவப்பா பாப்பார புள்ள மாதிரி இருந்தாலும், போயிருக்கிறது தேவர், கவுண்டர், வன்னிய நண்பர் வீடா இருந்தாலும், அந்த வார்த்தை அப்படி சுடும்.

நண்பனின் வீட்டின் உள்ளே உட்கார்ந்திருக்கும்போது, வாசலில் வந்து குழைந்து நிற்கும் இவனது சாதிக்காரன் போகும் வரை வெளியே வரக் கூசும். கொல்லையில் பாத்திரம் கழுவும் இவன் சாதியைச் சேர்ந்த அக்காவை நண்பன் மிகச் சாதாரணமாக எடியேய் என்று சொல்ல இவனுக்கு சுருக்கென்றிக்கும்.

இவனை மாப்ள என்று உரிமையாகத் தான் அவனும் சொல்லுவான். வீட்டுக்கு வந்து சமமாகத் தான் சாப்பிடுவான். ஆனால் ஆதிக்க சாதி நண்பனுக்கு tongue slip ஆகும் இடங்களில் தான் இவனுக்கு heart break ஆகும்.
அவனுக்கு இருக்கும் comfort, luxury இவனுக்கு ஏன் இல்லையென்று யோசிக்கும்போது தான், இவன் arrogant ஆவான்.

என்னதான் சரிக்கு சமமா பழகினாலும், அவன் ஏன் restless ஆவுறான்னு தெரியலடா, அது சாதி புத்தியா இருக்கும் போல என்று நண்பன் இன்னொருவனிடம் சொல்வதைக் காதில் கேட்கும்போது இவன் கொஞ்சமாக உடைவான் பாருங்கள். பார்க்க முடியுமா உங்களால்?

முகநூல் பதிவு