கொரோனா உருவாக்கப்பட்டதா

Spread the love

கொரோனா உருவாக்கப்பட்டதா ?

வானகம் ஏங்கல்ஸ் ராஜா Engals Raja

பற்றுடையோர் / அன்புடையோர் யாவருக்கும் ,

கொரோனா – 19 என்ற ஒன்று உலகையே உலுக்கிக் கொண்டு உள்ளது.

இது உருவாக்கப்பட்டது அல்ல.

உருவாக்கிய ஒன்று இத்தனை நாள் உயிரோடு இருக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பருவ /கால மாற்ற ஓட்டத்தில் சில உயிர்கள் புதிதாக உருவாகும் என்ற அறிவியல் / இயற்கை தத்துவங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி உருவான உயிர்கள் உலகில் நன்மையையே செய்யும் என்பதையும் நம்பத்தான் வேண்டும்.

அவ்வுயிகளுக்கான உணவு எவ்வுயிர்களின் உடலில் உள்ளதோ அவ்வுயிர்களிடத்தில் தஞ்சம் கொள்ளும். தன்னுடைய உணவை உட்கொள்ளும்.

இவ்வாறு நடக்கும் போது பல நேரங்களில் நமது பார்வைக்கும் / புரிதலுக்கும் நன்மையாகவும், தீய்மையாகவும் தெரியும்.

உண்மையில் அது நன்மையே என்பதை நம் மனம் ஏற்க மறுக்கும்.

காரணம் நமக்குப் பிடித்தமானதை இழக்கத் துணிவு இல்லாதது தானே!?

மனித உடலின் தன்மையென்பது…

எப்போதும் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் ஆற்றலோடு தான் படைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மனிதர்களின் புறத்தேடல் காரணமாக உடம்பு ஒரு மிக முக்கியமான பொருள் என்பதை மறந்து போனோம்.

அத்தேடலில் உடலைக் கெடுத்து பொருளை தேடினார்கள்.

உடல் நலிவுற்றது.

நொந்து போனது.

இதன் தொடர்ச்சியான இயற்கை தத்துவம் ……

நொந்தது சாகும்!
நொந்தது நோயைக் கவர்ந்து இழுக்கும்!!

தக்கது தகவமைத்துக் கொள்ளும் !

என்பது போல,

இச்சூழலில் யாரெல்லாம் ஆரோக்கியமான உடலைக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களை இந்நோய் ஒன்றும் செய்யாது / செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் .

அவசர ஓட்ட வாழ்க்கையில் நோய் குணமாவதை நோயென்று நினைத்து குணமாகலுக்கு எதிர்நிலை கொண்டார்கள் மனிதர்கள்.

இது தொற்று நோயா? இல்லையா? என்பதை கடந்து இது பருவகால நோய் என்பதை உணர்ந்தும், நோயெதிர்ப்பு அற்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும் .

நோயை உடலுக்குள்ளேயே அடைத்தார்கள்.

அதன் விளைவாக உடலில் இயல்பான இயக்கம் தடையோட்டமாக மாறியது.

உடலின் நோயெதிர்ப்பாற்றல் நன்றாக இருந்தால் இது ஒன்றும் செய்யாது என்பதையும், நோயெதிர்ப்பாற்றல் இல்லையென்றால் உடல் தோற்று போகும் என்பதையும் நிகழ்காலம் நமக்கு உணர்த்துவதை நாம் உணர வேண்டும்.

இவ்வடிப்படையில்,

கொரோனா 19 வந்த பகுதியில் அனைவருக்கும் வரவில்லை என்பதையும் வந்தவர்கள் எல்லோரும் சாகவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் ..

கிருமிகள் மட்டுமே காரணமாக இருந்திருந்தால் எல்லோரையும் தாக்கியிருக்கும், தக்கியவர்கள் எல்லோரும் மாடிந்திருப்பர் என்பதையும் உணர வேண்டும் .

இது தொற்று நோயா? இல்லையா? என்பதை கடந்து இது பருவகால நோய் என்பதை உணர்ந்தும், நோயெதிர்ப்பு அற்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும் .

நோயெதிர்ப்பு ஆற்றலை வளர்க்கும் வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் .

“நோய்க்கு இடங்கொடேல்” என்பது அவ்வையின் வாக்கு..

தமிழறிவு உடையோர் எல்லோரும் அவ்வை சொன்ன நோய்யனுகா விதிகளையும், அய்யன் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து, நீர்த்தார் பெருமை, தவம், மருந்து, நிலையாமை ஆகிய அதிகாரங்களை படித்து விளங்கி கடைபிடியுங்கள்.

தமிழறியாதவர்களுக்கு தேவையை அறிந்து எடுத்து சொல்லுங்கள் ..

உடல் வளர்த்தேன்!
உயிர் வளர்த்தேன்!
-திருமூலரவர்களின் வாக்கு.

உடலை காக்கிறேன் என்று வயிறு புடைக்க திண்ணாதீர். அரை வயிறு உணவு அதுவும் ஓரிரு வேளை மட்டுமே என்பதை கடைபிடியுங்கள்.

லெ.ஏங்கல்ஸ் ராஜா.

Leave a Reply