கொரோனாவும் தமிழ் மருத்துவமும்

Spread the love

உலக மக்களிள் ஒரே வார்த்தை கொரோனாவாக உள்ள சூழலில், பதட்டமும், அச்சமும்,அலட்சியமும் குறைவில்லாமலே உலவுகிறது. இந்த நிலையில் தமிழ் மருத்துவம் என்ன தீர்வு வைத்துள்ளது என்ற கேள்விகளுக்கும் குறைவில்லை. கேள்விக்கு விடையாகவும்,நம் மருத்துவத்தின் ஆழத்தை விளக்கவும் எடுத்த சிறு முயற்சியே …….

By Rajamurugan Rajamanickam from fb

உலக மக்களிள் ஒரே வார்த்தை கொரோனாவாக உள்ள சூழலில், பதட்டமும், அச்சமும்,அலட்சியமும் குறைவில்லாமலே உலவுகிறது. இந்த நிலையில் தமிழ் மருத்துவம் என்ன தீர்வு வைத்துள்ளது என்ற கேள்விகளுக்கும் குறைவில்லை. கேள்விக்கு விடையாகவும்,நம் மருத்துவத்தின் ஆழத்தை விளக்கவும் எடுத்த சிறு முயற்சியே …….

தமிழ் மருத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் உடல் தத்துவத்தின் படி,மனித உடலின் கட்டமைப்பிற்கு ஆதியும் ஆதாரமுமாக அமைந்திருப்பது ஐம்பூதம் (பஞ்சபூதம்) எனப்படும் நிலம், நீர் நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். இந்த ஐம்பூதங்களின் ஒருங்கினைந்த நிலையை (பஞ்சீகரணம்) வெளிப்படுத்தும் இயக்கத்தை முக்குற்றம் என்கிறோம். முக்குற்றத்தின் இயக்கக் கூறுகளான வளி(ஐம்பூதங்களுல் காற்றை முக்கிய கூறாகக்கொண்ட வாதம்), அழல் (ஐம்பூதங்களுல் நெருப்பு/ சூட்டை முக்கிய கூறாகக்கொண்ட பித்தம்) மற்றும் ஐயம் ( ஐம்பூதங்களுல் நீரை முக்கிய கூறாகக்கொண்ட கபம்) ஆகிவற்றின் அந்தந்த உடலிற்கேற்ற சரி-விகித அமைப்பே , உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.

மனித உடல் அதனது ஆரோக்கியத்தை சீரான நிலையில் வைத்துக்கொள்வதற்காக தனக்கென ஒரு இயக்க முறையை கொண்டுள்ளது. இவற்றுள் உடலின் அனைத்து அணுக்கூறுகளுக்கும் ஊட்டம் கொடுப்பது , திசுக்களை புதுபிப்பது , உடலின் இராச கருவிகள் எனப்படும் மூளை,இருதயம் , நுரையீரல், கல் ஈரல்,இரைப்பை – குடல் போன்றவற்றையும் , மற்ற உறுப்புகளையும் பராமரிப்பது,
வளரும் பருவத்தில் சீரான வளர்ச்சியையும் பருவத்திற்கேற்ற மாற்றங்களையும் ஏற்படுத்துவது , திட மற்றும் ஆற்றல் கழிவுகளை வெளியேற்றுவது , நோய் / பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளின் ஊடுருவலையும் வளர்ச்சியையும் தடுப்பது போன்ற அக இயக்கங்களை உடல் இடைவேளையின்றி செயல் படுத்திக்கொண்டே இருக்கின்றது . இந்த அக இயக்க நிலையை , நாம், பசி,தாகம், உறக்கம், வாந்தி, மலம் மற்றும் சீறுநீரை வெளியேற்றல் போன்ற நாம் உணரக்கூடிய செயல் பாடுகள் மூலமும் , நகம், முடி , சருமம் ஆகியவற்றின் வளர்ச்சி / தோற்றம் , கண் ஓளி, முக தோற்றம், சுறுசுறுப்பு போன்ற புற செயல் நிலைகள் மூலமும் உணர இயலும்.

வெளியிலிருந்து உடலிற்குள் செல்லும் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற பொருட்களை உடல் வெளியேற்ற முயற்சித்துக்கொண்டே இருக்கும் , தும்மல் மூலம் தூசியை வெளியேற்றுதல், வாந்தி மூலம் செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல் என சொல்லி கொண்டே போகலாம். இது போல் உடலின் செயல் பாட்டிற்கு தேவைப்படும் நுன்னுயிரிகளை வைத்துக் கொண்டு தேவையற்ற மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடுய நுண்ணுயிரிகளை தெளிவாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி வெளியேற்றும் செயல்பாடு உடலில் நடந்து கொண்டே இருக்கும்.முன் குறிப்பிட்ட செயல்பாடுகள் சீராக தடையின்றி நடப்பதற்கு,

உடல் தன் நிலையிலிருந்து திரியாமல் இருப்பது அவசியம். அதாவது வாதம், பித்தம், கபம் சீராக இருத்தல், பசிக்கு உடலின் தேவையை உணர்ந்து அமைத்த உணவும், தாகத்திற்கு நீர், ஓய்வு, கழிவு வெளியேற்றம் என உடல் சூழலை முறையாக வைத்திருந்தால், உடல் தன்னை வளமையாக வைத்திருக்கும். நோய் ஏற்படுத்தும் கூறுகள் உடலை அணுகினால் அல்லது உடலிற்குள் ஊடுருவினால் உடல் அவற்றை எதிர்த்து போராடும், கட்டுக்குள் வைத்திருக்கும், பின் முழுமையாக நீக்கும், ஊடுருவிய நோய்கூறுகளை நிரந்தரமாக எதிர்க்கும்திறனை வளர்த்து அடுத்து வராமல் காக்கும். என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.

நோயிற்கு வைத்தியம் பார்பது என்பது உடல் ஆரோக்கியத்தை சீர் படுத்துவதற்கு நிரந்தர தீர்வாக அமைவதில்லை, நோய் அல்லது செயல் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கும் உடலின் முக்குற்ற நிலையின் சீர்கேட்டை திருத்த மருத்துவம் பார்பதே நம் தமிழ் மருத்துவத்தின் அடிப்படை அணுகு முறை. இந்த அணுகுமுறை வாதம், பித்தம், கபத்தின் (முக்குற்றத்தின்) சரி விகித நிலையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பது நமது தமிழ் மருத்துவத்தின் ஆழ்ந்த அறிவியல் அடிப்படையை வெளிப்படுத்துகிறது .

ஒருவரின் உடலில் எந்த கூறு, எந்த காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய முக்குற்ற கூறுகளையும் அந்தந்த காலம் மற்றும் பருவத்திற்கு ஏற்றார் போல் சீராக வைக்க உதவும் உணவுகளை உண்ன சொல்லுவதும், பாதிப்பை உருவாக்கும் உணவுகளை தவிர்க சொல்லுவதும், வாழ்வியல் முறைகளில் மாற்றங்களை செய்வதும் ஒரு மருத்துவரின் அடிப்படை செயலாக இருந்தது. இந்த அடிப்படை அணுகுமுறைக்கு கட்டுப்படாத நிலைக்கும் , மற்றும் முக்குற்ற சீர்கேட்டை கட்டுக்குள் கொண்டு வர உடலில் ஆற்றல் இல்லாதவர்களுக்கும் மருந்து தேவைப்படுகிறது. உடலின் தேவையை உண்ர்ந்து அதற்கேற்ற மருந்துகளை முறைப்படி செய்து முறைப்படி உட்கொள்ளும்பொழுது பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த உடற்ச் சூழலிலும், வந்த நோயை தடுக்கும் ஆற்றல் திறன் உடலிற்கு உண்டு என்பதே அடிப்படை.

முறையான பாதுகாப்பும், உணவும் அவசியம். அறிகுறிகள் 9 நாட்களுக்கு மேலும் நீடித்து வீரியமானால் முறையான மருந்துகளை தொடங்க வேண்டும், இது தொற்றிலிருந்து குணமாக்கும். அவசியமானால் கொரோனா உதவி எண்ணுக்கு அழைத்து உதவி பெறவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுக் கொண்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. முன் குறிப்புட்டுள்ள படி நாம் அவரவரது உடல் இயக்க நிலைக்கேற்ப வாதம், பித்தம் , மற்றும் கபம் கூடி நிலவும் முக்குற்ற நிலையில் உள்ள சீர் கேடை உணர்ந்து அதனை அவர்அவர் உடலிற்கேற்ற விகிதத்தில் அமைய தேவையான உணவு முறை , வாழ்வியல் முறை மற்றும் அவசியப்பட்டால் முக்குற்ற நிலையை சீர் செய்யத் தேவையான மருந்து முறையையும் கடைப்பிடித்தால் நமது உடலில் ஊடுருவும் நோய் ஏற்படுத்தும் கூறுகளுக்கும் கிருமிகளுக்கும் *(அது கொரோனா வாக இருந்தாலும் அல்லது எதிர் காலத்தில் புதிதாக அடையளம் கானப்படவிருக்கும் கிருமியாக இருந்தாலும்)* தனிபட்ட மருந்துகளை தேடவேண்டிய அவசியம் இல்லை . கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், உமிழும் போதும் நீர் திவலைகளாக காற்றின் மூலம் 2 மீட்டர் (சுமார் 6 அடி) இடைவெளிக்குள் இருக்கும் மற்றவரகளுக்கு நேரடியாகவும் அல்லது அந்த வைரஸ் தாங்கிய திவலைகள் எதாவது பொருட்களின் மீது படிந்து அதை 12 மணி நேரத்திற்குள் தொடுவதின் மூலம் , தொடுபவரின் மூக்கு, வாய், கண் போன்ற உறுப்புகள் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தொற்று ஏற்பட்ட நாளிலிருந்தோ அல்லது 3-4 நாட்களுக்குள்ளாகவோ சளி, இருமல்,தொண்டை எரிச்சல் மற்றும் வலி, மிதமான காய்சல், தலைவலி, உடல்வலி, பசியின்மை, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதின் மூலம் தொற்றை உறுதிபடுத்தலாம். இது நம் மூலம் மற்றவர்களுக்கு பரவாதவாறு நம்மை தனிமைபடுத்தி கொள்ளவேண்டும். முறையான பாதுகாப்பும், உணவும் அவசியம். அறிகுறிகள் 9 நாட்களுக்கு மேலும் நீடித்து வீரியமானால் முறையான மருந்துகளை தொடங்க வேண்டும், இது தொற்றிலிருந்து குணமாக்கும். அவசியமானால் கொரோனா உதவி எண்ணுக்கு அழைத்து உதவி பெறவும்.

*~முன்எச்சரிக்கையாக கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் முறைகளும் உணவு முறைகளும் : ~*

பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும், மற்றவர்களிடம் கைகுழுக்குதல்,தழுவுதல் போன்ற செயல்களை தவிர்க்கவும். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் கைகுட்டையை பயன்படுத்தவும், பொது இடங்களில் உமிழ்வதை தவிர்க்கவும். கபத்தை (சளியை) மிகைப் படுத்தும் உணவுகளை தவிர்க்கவும். புது வகையான உணவுகளை தவிர்த்தும்,ஒவ்வாமை உணவுகளை தவிர்த்தும், சாஸ் போன்ற புளிப்புமிகுதியான உணவுகளையும் சுவையூட்டிகளையும் தவிற்கவும். எண்எணய்யில் பொறித்த உணவுகளை முற்றிலும் குளிர்சியான உணவுகளையும், பெரியவெங்காயம், பீட்ரூட், பீட்ரூட் கீரை,பசலைக்கீரை,
வெந்தயம்/ வெந்தயக்கீரை( முளை கட்டிய வெந்தயத்தை சேர்க்கலாம்) , தண்டுக்கீரை, பசலைக்கீரை வகைகள் ,மிளகாய், குடமிளகாய், பச்சைவாழைப்பழம், நாட்டு வாழைப்பழம்,பச்சை வாழைப்பழம்(இதில் பச்சை மற்றும் மஞ்சள் நிற இரகங்கள் இரெண்டையும் தவிர்க்கவும்), மலை வாழைப்பழம் , கொய்யாப் பழம் (கொய்யாக் காய் சேர்க்கலாம்), தர்பூசனி, வெள்ளரிப்பழம் , அண்ணாசிப்பழம் , சீமை / ஒட்டு மாதுளை, திராட்சை,வெளிநாட்டு பழங்கள், தயிர் , எண்ணெய் பலகாரம், மைதா மற்றும் டால்டா/ வனஸ்பதி சேர்த்து செய்த உணவுகள் , இனிப்பூட்டி பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளை தவிற்பதன் மூலம் தொற்றுக்கான வாய்பை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும்.

நாம் உண்ணும் உணவில் மிளகை அதிகம் பயண்படுத்தி மிளகாயை முற்றுலும் தவிர்பது நன்று . கஞ்சி போன்ற எளிதாக சீரணமாகும் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உடலில் நீர் சத்து குறையாமல் நீர் உணவுகளை எடுத்து கொள்ளுதல், வெண்ணையை நீக்கி தாளித்த மோரை அளவாக சேர்த்தல்,எண்ணையை குறைவாக பயண்படுத்துதல், கடுகு, பெருங்காயம், சின்னவெங்காயம், தோல் நீக்கிய இஞ்சி, மஞ்சள், சீரகம் ,தோல் நீக்கிய சுக்கு , ஓமம் , போன்ற உணவு பொருட்களை அதிகம் சேர்த்து கொள்ளுதலும், பிஞ்சு காய்கறிகள் மற்றும் துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை சேர்த்து கொள்ளுதளலும் உடலை நலமுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கீழ் குறிப்பிட்டுள்ள முறையை கிருமிகளின் ஊடுருவலில் இருந்து நம் உடலை பாதுகாக்க பின் பற்றலாம்:

1) 15 கிராம் சுத்தமான விரளி மஞ்சள் (கறி மஞ்சள்) தூளை, 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும், அது 1-1/2 லிட்டராக வற்றிவரும் சமயம் 15 கிராம் படிகாரத் தூளை சேர்த்து ( படிகார கட்டியை வாங்கி பொடித்துக் கொள்ளவும்) அது கறைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, சூட்டுடன் தூய பருத்தி துணியால் அதை வடிகட்டி ஆரியதும் கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

2) சோற்றுக் கற்றாழையின் (கைப்பு இரகம்- Aloe vera )முழு இலைச் சாறை முழுமையாக மூக்கு, உதடு, கண் இமைகள் போன்ற பகுதிகளில் தடவலாம்.

தயாரிக்கும் முறை:
சோற்றுக் கற்றாழையின்முழு இலைச் சாறை வாங்கி பயன் படுத்தலாம் , நாமே தயாரித்துக் கொள்வது சிறந்தது :

சோற்றுக் கற்றாழையின் (கைப்பீன்இரகம்- Aloe Vera) முழு மடலை எடுத்து இரண்டு பக்கங்களிலும் உள்ள முட்களையயும் , 2அங்குல நீளத்திற்கு முனையையும் சீவி அகற்றி விடவும், பின் அதை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து கொள்ளவும். *1 கிலோ அரைத்த கற்றாழை சாறுடன், 50 கிராம் படிகார தூளை சேர்த்துக் கொள்ளவும், மீண்டும் நன்றாக கலக்கி, சுத்தமான பருத்தி துணியில் போட்டு, அதை மூட்டையாக கட்டி, 6-10 மணி நேரம் கட்டி தொங்க விடவும், மூட்டைக்குக் கீழ் வடியும் சாற்றை சேகரிக்கும் விதத்தில் தகுந்த பாத்துரத்தை வைக்கவும்.
6-10 மணி நேரம் பின் மூடையை பிழிந்து சாற்றை மட்டும் சேகரித்து தகுந்த (வெளிச்சம்புகாத ) புட்டிகளில் ஙைத்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

3) முழு சோற்றுக்கற்றாழைச் செடியை (வேறுடன்) தலை கீழாக வீட்டின் நுளைவாயில் களின் முன்புறம் க ட்டி தொங்க விடலாம்.

4) மாசிக்காய் சிறிதும்(1/2 முதல் 3/4 கிராம் வரை, மிளகும் ( எண்ணிக்கயில் 3-5)சேர்த்து மென்று வாயில் வைத்திருந்து உமிழ்நீரை விழுங்கவும் – இதை நாளுற்கு 2-3 முறை செய்யலாம்.

5) வீட்டில் வெள்ளை குங்கிலியத்தால் புகைபோடலாம்.

 

*சளி , காய்ச்சல் ஏற்பட்டால் கீழ் குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றலாம்:*

~அ). மதுரக்கியாழம் (குடிநீர்) சரக்குப் பட்டியல் ; ~
(ஒரு நாள் 3 வேளைக்கான குடிநீர் செய்வதற்கு தேவைப்படும் சரக்கு)

1) சுக்கு (தோல் நீக்கி) – 7-1/2 கிராம்,
2) மிளகு – 5 கிராம்,
3) திப்பிலி – 2-1/2 கிராம்,
4) அதிமதுரம் – 45 கிராம்,
5) சிற்றரத்தை – 3-1/2 கிராம்,
6) வால் மிளகு – 2-1/2 கிராம்,
7) விரலி மஞ்சள் – 1-1/2 கிராம்,
8) மாசிக்காய் – 1-1/2 கிராம்,
9) கோரைக்கிழங்கு (தோல்/சருகு நீக்கி) – 10கிராம்,
10) நீரடி முத்து பருப்பு ( ஓடு நீக்கியது) 1-1/2 கிராம் முதல் 7கிராம் வரை,
11) மஞ்சட் கடுக்காய்தோல் – 1-1/2 கிராம்,
12) ஜாதிக்காய் ( தொண்டை வலி இருந்தால் மட்டும் சேர்க்கவும்) 1/2 கிராம்,
13) தண்ணீர் -8 டம்ப்ளர் (1600 மி.லி.)

செய்முறை:
வரிசை எண் 1) லிருந்து வரிசை எண் 12) வரை உள்ள சரக்குகளை ஒன்று கூட்டி நன்கு தட்டி , தகுந்த பாத்திரத்திலிட்டு, அளவுப்படி தண்ணீர் சேர்த்து , அடுப்பேற்றி , சிறு தீயாக எரித்து 8ல் ஒரு பங்காக ( 200 மி.லி. யாக) வற்றியதும் அடுப்புலிருந்து இறக்கி , சூடு தணிந்ததும் தகுந்த மூடியிட்டு மூடி வைக்கவும்.
உபயோகம்:
1) சளி-இருமல்- தொண்டை வலி மட்டும் இருந்தால், 5முதல் 7 நாட்கள் வரை ( அல்லது குனமாகும் வரை), ஒருநாளிற்கு 3 வேளை (காலை, மதியம் மற்றும் இரவு) உணவிற்கு 30 -45 நிமிடத்திற்கு முன் , வயது மற்றும் உடல் நிலைக்கு தகுந்தாற்போல் வேளைக்கு 30 மி.லி. முதல் 60 மி.லி. வரை குடிநீரை அளவுப்படி வடிகட்டி தனியாக எடுத்து , மிதமாக சூடேற்றி அருந்தவும்/ அருந்தச்செய்யவும்.

2)சளி-இருமல்- தொண்டை வலியுடன் சேர்த்து காய்ச்சல்/ சுரமும் இருந்தால் 5 முதல் 7 நாட்கள் வரை ( அல்லது குனமாகும்வரை) , ஒரு நாளிற்கு 3 வேளை ( காலை, மதியம் மற்றும் இரவு ) உணவிற்கு 30-45 நிமிடம் பின் , வயது மற்றும் உடல் நிலைக்கு தகுந்தாற்போல் 30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அளவுப்படி வடிகட்டி , தனியாக எடுத்து , மிதமாக சூடேற்றி அருந்தவும்/ அருந்தச்செய்யவும்.

குறிப்பு: இந்த குடிநீரை செய்ததிலிருந்து 72 மணிநேரம் வரை தேவைப்படும் சமயங்களில் மிதமாக சூடேற்றி பயன் படுத்தலாம்.

ஆ) சுதர்சன சூரணம் (impcops)

காய்ச்சல்/ சுரம் தனியாகவோ , சளி , இருமல் , தொண்டை வலியுடன் சேர்ந்தோ இருந்தால் , காலை, மதியம் மற்றும் இரவு உணவிற்கு 30-45 நிமிடம் முன் 1 கிராம் முதல் 3 கிராம் வரை சுதர்சன சூரணத்தை 10 – 15 கிராம் தேனுடன் கலந்து காய்ச்சல் குணமாகும் வரை உட்கொள்ளலாம்.(சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனை தவிர்த்து, நீருடன் உட்கொள்ளவும்)
உணவிற்கு 30-45 நிமிடம் பின் முன் குறிப்பிட்ட மதுரக்கியாழத்தை முறைப்படி உட்கொள்ளலாம்.

Leave a Reply