FEATUREDLatestNature

கொம்பன் ஆந்தை

Spread the love

இப்போதெல்லாம் அப்படித்தான் நிகழ்கிறது.வாழ்வில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேடுபவை பல இருக்கும்.ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று அவசியம்.அதிசயம்.எல்லொருக்கும் எல்லாமும் அதிசயமாக தெரிய வேண்டியதில்லை.

ஒரு பறவை காதலனாக இருந்து பார்க்கும் போது தான் அதை புரிந்து கொள்ள முடியம்.திருவண்ணாமலையில் முதன் முதலில் நண்பர் குமார்தான் அதை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.பார்க்க வேண்டும் என விரும்பிய போது மறு நாள் காலை சரியாக ஆறு மணிக்கு வந்து விட வேண்டும் ஏழு மணிக்கு சென்றால் பார்த்து விடலாம் என்று கூட்டிச்சென்று காண்பித்தார்.இரண்டடிக்கு மேல் உயரமான தலையில் கொம்பு போன்ற இறகு உள்ள ஆந்தை. அதன் பின் சில நேரம் மாலையில் குமாரை சந்திக்க செல்லும் போது குரல் மட்டும் கேட்கும் அதுவும் அதன் குரல் என்று அவர் தான் அறிமுகம் செய்தார்.உஃப் உஃப் என என்றுமே மறக்கமுடியாத சப்தம்.

திருவண்ணாமலை விட்டு வந்து ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது.மூவரை வென்றானில் முதல் நாள் அதே சப்தம் மலையில் எதிரொலித்தது.ஆஹா இங்கிருக்கிறதா ? இரண்டு மூன்று முறை குரல் கேட்டு உறுதிப்படுத்தியவுடன் இராஜவேலிடம் சொன்னேன்.இங்கு ஒரு பெரிய ஆந்தை இருக்கிறது.வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்றேன்.அவரும் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தார்.

தினமும்தினமும் மூவரை வென்றான் குடைவறை சுத்தப்படுத்தும் பணி முடிக்கவும் மாலை மங்கவும் சரியாக இருக்கும்.குரல் கேட்க ஆரம்பித்து விடும்.முதல் நாள் மலை மீது நிழலுருவாக பார்த்தோம்.அண்ணா இவ்வளவு பெரிய ஆந்தையா ? என்றார் இராசவேல்.
மறு நாள் அடுத்த நாள் என அது போன்றே பார்த்துக்கொண்டிருந்தோம்.ஞாயிறன்று நண்பர்கள் மறமடக்கி ஆனந்தனும்,வீரசோழன் ஆனந்தனும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.அன்று மேலிருக்கும் சுனை நோக்கி ஏறினோம்.கண்ணெதிரே பறந்து சென்று அமர்ந்தது.எல்லோரும் பெரும் வியப்போடு கண்டு களித்தனர்.

பவர் பாண்டி திரைப்படத்தில் பாடலில் ஓர் வரி ‘’தேடிய தருணங்களெல்லாம் தேடிய வருகிறதே’’என்பதை போல். கொம்பன் ஆந்தையை காண தேடிப்போய் காத்திருந்த காலம் மாறி மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் அருளால் இப்போது தினம் தினம் பார்க்கிறோம்.எந்த நேரத்தில் எங்கு அமர்ந்திருக்கும் என உத்தேசமாக அனுமானிக்க ஆரம்பித்து விட்டோம். இனி எங்களுக்கு பார்க்க வேண்டும் என தோன்றினால் எங்கு அமர்ந்திருக்கும் என போய் பார்த்து விடுவோம். யார் கண்டது ! நாங்கள் அதை காண வருவோம் என விருந்தினர்களை வரவேற்க காத்திருப்பது போல அது எங்களுக்காக காத்திருக்கக்கூட செய்யலாம்.
🤣🤣
[#மூவரைவென்றான்](https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG) [#கொம்பன்ஆந்தை](https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?source=feed_text&epa=HASHTAG)

Leave a Reply