குவார்க்குகளால் பூமி அழியப் போகிறது

Spread the love

தயாராகுங்கள் மக்களே!

மிகப்பிரபலமானவரான வானியல் இயற்பியலாளர் ‘பேராசிரியர் மார்டின் ரீஸ்’ (Professor Martin Rees) அவர்கள், ‘On the future’ என்னும் புத்தகம் ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அது புத்தகமே அல்ல, அறிவியல் உலகில் சத்தமாக வெடித்திருக்கும் வெடிகுண்டு.

‘பூமி 300 அடி அளவிலான சின்னப் பந்தாகச் சுருங்கி சீரழியப் போகிறது’ என்னும் வெடிகுண்டை உள்ளே நுழைத்துப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதற்கு அவர் சொல்லியிருக்கும் இரண்டு காரணங்களும் கொஞ்சமாக அடிவயிற்றில் புளியைக் கரைக்காது. புளிய மரத்தையே கரைக்கக் கூடியது.

சுவிஸில் இருக்கும் சேர்ன் பெருந்துகள் மோதியின் (Large Hadron Collider – CERN) பரிசோதனைகள் மூலமாகச் சிறிய அளவுக் கருந்துளைகள் (Blackholes) உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் (இது முன்னரும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது), ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதியவகைக் குவார்க்குகளால் பூமி உள்நோக்கிச் சுருங்கும் ஆபத்து இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். இவர் சும்மா போகிற போக்கில் உலகம் அழியப் போகிறது என்று ராஜ்சிவாபோல அடித்துவிட்டுப் போகும் ஒரு சாதாரண நபர் அல்ல. இதைச் சொல்வதற்கான முழுமையான அறிவும், தகுதியும் பெற்ற பேரறிஞர் அவர். இந்தச் சமயத்தில் ஒரு விந்தை நடைபெற்றிருக்கிறது. அதுதான்

இங்கு ஹைலைட்டே!

 

கடந்த சில நாட்களின் முன்னர், சேர்ன் ஆராய்ச்சியின் மூலம் இரண்டு வகையான புதியவகைக் குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை ‘பியூட்டி குவார்க்குகள்’ (b quark) என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் மூன்றாவது இன்னுமொரு குவார்க்கும் கண்டுபிடிக்கும் நிலையில் இருக்கிறது. ஏற்கனவே ஆறுவகைக் குவார்க்குகள் இருந்த நிலையில் மேலும் மூன்று குவார்க்குகள். இந்தப் பேரண்டமே குவார்க்குகளால் உருவானவைதான்.

 

புதியவகைக் குவார்க்குகளின் கண்டுபிடிப்பு, ரீஸ் அவர்களின் வாக்குமூலத்தை உண்மையாக்கி, நம்மை நடுத்தெருவில் புழுதியாக்கிவிடுமோ என்ற அச்சம் சற்று வருவது நிஜம்தான்.

சியர்ஸ் மக்களே! என்ன, நீங்கள் தயாரா? 😜😜😜😜😜.