கற்பனை பயணம் – part 2
#கற்பனை_பயணம் பகுதி 2
அந்த சூரியன் நிழல்படா மண்ணில்
அந்த மேகங்களை முட்டி நிற்கும் மரங்களின் அடியில்
கொஞ்சும் நீர்வீழ்ச்சி
இரையை தேடும் பறவைகள்,பாம்புகள்
தன் குட்டியை கொஞ்சம் விலங்குகள்
மரக்கிளைகளின் நடனம்
பூக்களின் நறுமனம் வீச இன்னிசை பூங்காற்று
மனிதர்கள்
ஓர் பறவையாக வாழ்ந்தார்கள் எந்த ஓர் தேடலை தேடாமல் எந்த ஓர் ஆசையும் இல்லாமல்
விலங்குகள் பறவைகள் முதற்கொண்டு
இயற்கை முழுவதுமே மனிதனை கொஞ்சுகிறது
பறவைகளின் சப்தக்களையும் விலங்குகளின் சப்தக்களையும் மனிதர்கள் #உணர்வின் மொழியாக பயன்படுத்தி கொண்டார்கள்
#பயம் என்பதே கிடையாது அங்கு
ஏனெனில் இயற்கை அரவனைப்பு அங்கு அப்படி இருந்தது
#உணர்வு மட்டுமே அங்கே உயிர் கொண்டு #இருந்தது மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் விலங்குகளுக்கும்
இந்த #உணர்வு மட்டுமே
அங்கே !
உணவு முதல் இருப்பிடம் வரை அனைத்து #சுழற்சி #உணர்வு முறையில் வாழ்ந்து வந்தார்கள் மனிதர்கள் முதல் மரங்கள் வரை
விலங்குகள், பறவைகள், பசிக்கு வேட்டையாடுவதை போலவும்
மனிதர்களும்
#பசிக்கு இயற்கை பழங்களையும், விலங்குகளையும் வேட்டையாடி கொண்டு எந்த ஓர் #திட்டமிடுதலும் இல்லாமல் இயற்கையின் உணர்வின் மூலம் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் மனிதர்கள்,
மரங்களிலும் மர குகைகளிலும் வாழ்கையை #உணர்வின் மூலம் மட்டுமே வாழ்ந்தார்கள்
அப்போது என்ன #தோன்றுமோ அதை மட்டுமே செய்வார்கள்
இந்த இயற்கை முழுவதும் எந்த #ஏற்ற #தாழ்வு மனப்பான்மை இல்லாமல் அனைவரையும் தாய் கொஞ்சம் குழந்தை போல பார்த்து கொண்டது #இயற்கை
இது காடுகள் என்பதை விட சொர்க்கம் என்றே கூறலாம்
பயனிப்போம்,,,