ஏலியன்ஸ் இருக்கா இல்லையா Fermi paradox

Spread the love

ஏலியன்ஸ் இருக்கா இல்லையா

ஏலியன்ஸ் இருக்கா இல்லையா?நம்மள பாக்க வருமா வராதா?ஏன் இன்னும் வரல?இந்த கேள்விய அடிக்கடி நாம கேட்போம்ல.இதைத்தான் நாம Fermi paradox ன்னு சொல்லுறோம்..அப்படி வந்தா அதுங்கள்ட எப்படி பேசுறது..Arrival படத்துல வர்ற மாதிரி அவங்க மொழிய புரிஞ்சு அவங்கிட்ட பேசி காப்பி சாப்ட வாங்கன்னு கூப்ட முடியுமா?சரி நாம ஏன் ஏலியன் வர்ற வரை வெயிட் பண்ணனும்,நாமலே அதை தேடி போனாதான் என்ன..அப்படி போகும் போது நம்மால மட்டும் எப்படி அவங்க கூட உரையாட முடியும்?அதுக்கு முதல்ல அவங்களுக்கு புரியுற மாதிரி ஒரு செய்தியை அனுப்பனும்ல.அது எப்படி இருக்கும்?இதையெல்லாம் கவனிக்க ஒரு பெரிய அமைப்பே இருக்கு..

The Center for the Study of Extraterrestrial Intelligence (CSETI)
Search for extraterrestrial intelligence(SETI)
Messaging Extraterrestrial Intelligence(METI)

இன்னும் சொல்ல போனா External affairs போல extraterrestrial affairs யே இருக்குய்யா..

Milky-Way
Milky-Way
Zoo hypothesis:

நாம zoo க்கு போனா எப்படி விலங்குகளை அதுங்க என்ன பேசுதுன்னே தெரியாம பாக்குறோம் அதே போல பக்கத்து கேலக்ஸில உள்ள ஒரு வேற்றுகிரக உயிரின கூட்டம் நம்மை கண்காணிச்சு நம்மகிட்ட ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சு நம்ம பக்கட்டு வராம இருந்தா?

இல்லை இவிங்கிட்டலாம் எதுக்கு பேசிகிட்டுன்னு யோசிச்சுருந்தா?இல்லை எப்படி பேசுறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தா?
இல்லை டைனோசர் காலத்துலையே வந்திறங்கி இன்னாடா இது அப்படின்னு பாத்து கடுப்பாகி போய்ருந்தா?.

நாம அனுப்புன செய்தி 25000 ஒளி ஆண்டுகள் தூரத்துல உள்ள ஏலியனுக்கு கிடைச்சுஅது நமக்கு பதில் அனுப்பியிருந்தா அந்தப்பதில் இன்னும் 25000 ஆண்டுகள் ஆகும் நமக்கு கிடைக்க.

ஆக இது எல்லாத்துக்கும் எல்லாத்துக்கும் வாய்ப்பு இருக்கு.அதெல்லாம் விடுங்க..நாம ஏலியன்ஸ் கூட தொடர்பு கொள்ள அனுப்பிய முதல் செய்தி என்ன?

Arecibo message:

1974 ல கார்ல் சாகனும்,ப்ராங் டிராக்ங் இருவரும்(வாயேஜர் கோல்டன் பிளேட் இவங்க செய்ததுதான்) சேர்ந்து 1679 bits கொண்ட ஒரு செய்தியை 73 லைன்ல 23 characters per lines ஆ பகுத்து போர்டோ ரிகோவில் இருந்து arecibo radio telescopic ல் உள்ள transmitter antenna மூலமா ~21000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள M13 கிளஸ்டர்க்கு அனுப்பி வைச்சாங்க.

இந்த செய்தி இப்ப வரை போய்கிட்டு தான் இருக்கும் இன்னும் 20958 ஒளி ஆண்டுகள் பயணிக்கனும் அங்க போய் சேர..ஒரு வேளை அவிங்க இதை புரிஞ்சுகிட்டு மறு பதில் அனுப்புனா அது வர 21000 ஆண்டுகள்..

அட போங்கடா!.

இந்த செய்தில என்ன இருந்துச்சுன்னு தானே கேட்குறீங்க. அது வேற ஒன்னும் இல்ல,

முதல் லைன் 12345678910 நம்பர்ஸ்.

அடுத்த லைன் 1678 15 இது என்னான்னா H C N O P ஆகிய அடிப்படை தனிமங்களின் அணு எண்கள்(டி.என்.ஏ உருவாக்கத்தில் இவை பயன்படும்).

அடுத்து மேலும் டி என் ஏ வின் விரிவாக diaxyribos and phosphate மூலக்கூறு மற்றும் அதில் உள்ள அடினைன்,தயமின்,சைட்டோசின்,குவானின் ஆகிய உயிரிகெமிக்கலின் வாய்ப்பாடுகள்,

அடுத்து டி.என்.ஏ வின் double helixe ஐ வரைந்தும்,அடுத்த லைனில் மனித உருவத்தை வரைந்தும்,

அடுத்ததாக நம் சோலார் குடும்பத்தை குறிப்பிட்டும்

கடைசியாக arecibo தொலைநோக்கி யின் உருவத்தை வரைந்தும் (பைனரி கோடுகளில்) அனுப்பி உள்ளனர்.

அது என்றா 1679ன்னு கேட்டா?அதிலும் சூட்சமம் உள்ளது என்னவென்று சொல்லுங்கள்.

Arecibo Message
Arecibo Message

இவை இருக்கட்டும்,நாம் வேற்றுகிரகவாசிகளுக்கு அழைப்பு விடுக்க என்னென்ன செய்தியை கூற வேண்டும் என்றால்,இங்கு இருக்கும் அடிப்படை தனிமங்கள்(the thing which we have common in the whole universe),இங்கு இருக்கும் மனிதர்களின் உடலமைப்பு,அடுத்ததாக நாமும் அவர்களும் எவ்வாறு கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுவதற்கான வழிமுறை.இவை அனைத்தும் தனித்தனி செய்திகளாக பைனரி கோடுகளாக மாற்றப்பட்டு வெவ்வேறு frequecy யில் அனுப்பப்படும்.

ஏலியன் சயிண்டிஸ்ட் இம்மூன்றையும் இரு பரிமாணத்தில் ஒன்று மேல் ஒன்றாக அடுக்கி ஒன்று சேர்க்கும் போது நாம் கூற வரும் செய்தி அவர்களுக்கு புரிய வரும்(பைனரி கோட் தெரிலைன்னா ஒன்னும் பண்ண முடியாது).

பக்கத்துல உள்ள புராக்சிமா செண்டாரிக்கு இதை அனுப்ப போறோம்..போக நாலு வருசம் ஆளு இருந்து பதில் அனுப்புனா வர நாலு வருசம்..ஆக எட்டு வருசத்துல தெரிஞ்சுடும்.

பொறுத்திருந்து பார்ப்போம் எவனாச்சும் வரானுங்களான்னு.

ஜெகதீசன் சாய்வராஜ்

Leave a Reply