NatureTOP STORIES

ஊதா கடல் நத்தை

Spread the love

இன்றைய பார்வையில் நாம் காண்பது ” ஊதா நத்தை ” அல்லது ” ஊதா கடல் நத்தை ” ( Violet sea snail or Common violet snail ). ஒரு கடல் ‘ காஸ்ட்ரோபாட் ‘ , பொதுவாக அதன் பிரகாசமான ஊதா நிறத்தை பிரதிபலிப்பதால் வயலட் நத்தை அல்லது ஊதா கடல் நத்தை என்று அழைக்கப்படுகிறது . இனி இந்த நத்தைகள் பற்றிய சில அறிவியல் சார்ந்த விவரங்களை இனி காண்போம்.

‘ Epitonidae ‘ குடும்பத்தைச் சார்ந்த இந்த ‘ ஊதா நத்தைகள் ‘ அதன் முழு வாழ்க்கையையும் கடல் மேற்பரப்பில் ( பெலாஜிக் ) சூடான கடல்களில் செலவழிக்கிறது.

நாம் காணும் பெரும்பாலான நத்தைகள் கடலின் அடிப்பகுதியில் ( பெந்திக் ) வாழ்கின்றன அல்லது பாறைகள் மற்றும் சுவர்களில் வலம் வருகின்றன. இந்த நத்தைகள் சிறிய காற்றுக் குமிழ்களைச் சுற்றி கடினமாக்கும் ஒரு பொருளான ‘ சிடின் ‘ சுரக்கின்றன. ஒட்டுமொத்தமாக , தெளிவான – குமிழ்கள் நிறைந்த இந்த நத்தைகள் ஒரு படகையும் உருவாக்குகிறது. நத்தைகள் பின்னர் தங்கள் ‘ பாதத்தை ‘ இந்த படகில் இணைத்து , அதன் மீது அது கடலில் சுதந்திரமாக மிதக்கிறது.

ஊதா கடல் நத்தை
ஊதா கடல் நத்தை

பூமத்திய ரேகை 47° N முதல் 40° S வரை ; 97 ° W முதல் 0° W வரை மற்றும் மிதமான நீரில் இந்த நத்தைகளின் விநியோக வரம்பு உள்ளது . இதன் ஷெல் 3-4 செ.மீ அளவு , இது மெல்லியதாகவும் , மென்மையாகவும் இருக்கிறது. மேலும் பரந்த பகுதியில் இருண்ட ஊதா நிறமானது , குறுகிய மேற்பகுதியில் ஒரு ஒளி ஊதா நிறத்திற்கு மங்குகிறது . மேலும் இதன் உடல் அடர் ஊதா முதல் கருப்பு வரை இருக்கும் .

இந்த நத்தைகள் ‘ ஹோலோ பெலாஜிக் ‘ ஆகும் , அதாவது அதன் முழு வாழ்க்கை சுழற்சியையும் திறந்த கடல் வெளியில் செலவிடுவதால் .. இதன் உணவாக , ஜெல்லி மீன் , வெலெல்லா வெல்லெல்லா மற்றும் பிசாலியா பிசாலிஸ் ஆகியவை அடங்கும்.

வயலட் நத்தைகள் ” புரோட்டாண்ட்ரிக் ஹெர்மாஃப்ரோடைட்டுகள் ” , அதாவது அவை ஆணாகப் பிறந்து காலப்போக்கில் பெண்களாக உருவாகின்றன. இந்த நத்தைகளின் கருத்தரித்தல் அகமானது , ஆனால் ஆண்களுக்கு ஆண்குறி இல்லை , எனவே நேரடி இனச்சேர்க்கை இல்லை . அதற்கு பதிலாக , ஆண்கள் தங்கள் விந்தணுக்களை ஒரு பெண்ணுக்கு நகர்த்தும் ஒரு வழியில் விடுவிக்கின்றன. அங்கு விந்தனுக்கள் முட்டைகளை கருவுற செய்கின்றன . முட்டைகள் ஒரு லார்வா வடிவமாக உருவாகும் வரை பெண் வைத்திருக்கின்றன. இந்த லார்வாக்கள் நீர் நெடு வரிசையில் நன்றாக நீந்துகின்றன. இவை பெரும்பாலும் பெரிய குழுக்களாக காணப்படுகின்றன.

சிறிய ஊதா நத்தைகள் , உடனடியாக தங்கள் சொந்த ராஃப்ட்ஸை உருவாக்க முடியும். இந்த இளம் நத்தைகள் தங்கள் கால்களைப் பயன்படுத்தி , தண்ணீரைத் தூண்டி குமிழிகளை உருவாக்குகின்றன.

குமிழி ராஃப்ட் எப்போதாவது உடைந்தால் , நத்தை கடலில் மூழ்கி இறந்து விடும். சில நேரங்களில் வலுவான காற்றினால் கரைக்கு வரும்போது கடற்கரைகளில் சிக்கி தவிக்கின்றன. இந்த நத்தைகளின் கண்கள் சிறியவை மற்றும் அதன் ஷெல்லின் அடிப் பகுதியில் அமைந்துள்ளன. ஷெல்லின் உயரம் 38 மி.மீ மற்றும் அகலம் 40 மி.மீ வரை இருக்கும் .

Zoological Name : Janthina janthina

இந்த நத்தைகளின் வாழ்விட அச்சுறுத்தலாக …
மீன் , பறவைகள் , கடல் ஆமைகள், பிற மெல்லுடலிகள் மற்றும் நுடிபிரான்ச்கள் ஆகியவை இந்த நத்தைகளின் வேட்டையாடிகளாக அறியப்படுகிறது.

இந்த ஊதா நிற கடல் நத்தைகள் ‘ வயலட் நத்தை ‘ மற்றும் ‘ குமிழி ராஃப்ட் நத்தை ‘ என்றும் அழைக்கப்படும்.

by:
Lakshmi Narayanan Subramania Bhattar

Leave a Reply