ஊதாத் தேன்சிட்டு Purple Sunbird

Spread the love

ஊதாச்சிட்டு அல்லது ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird) ஒரு சிறிய வகை தேன்சிட்டு. மற்ற தேன்சிட்டுக்களைப் போல் தேன் இவற்றின் முக்கிய உணவு ஆகும். எனினும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் வேளையில் மட்டும் சிறு பூச்சிகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இவை மிகவும் வேகமாக பறக்கும் தன்மை கொண்டு, ஓரிடத்தில் நிலையாகப் பறக்கவும் இயலும்.

ஆண் பறவைகள் பார்க்க கருப்பு நிறம் கொண்டிருந்தாலும், சூரிய ஒளியில் அவை ஊதா நிறத்தை வெளிப்படுத்துகின்றன. பெண் பறவைகள் மேலே ஆலிவ் பச்சை நிறமும், வயிற்றுப்பகுதியில் மஞ்சள் நிறமும் கொண்டுள்ளன.

மற்ற தேன்சிட்டுகளை ஒப்பிடும் போது நீளம் குறைந்த அலகை உடைய ஊதாத்தேன்சிட்டு கருத்த நிறமும் சதுரமாக முடியும் வாலையும் கொண்டது. ஆண் பெண் பால் வித்தியாசம் மிகத்தெளிவாக உள்ளது.

Leave a Reply