உலகத்தின்வரலாறு

Spread the love

Ponvannan
August 16 ·
#பொன்வண்ணன் #உலகத்தின்வரலாறு #பதிவு2

இஸ்ரேயல்….யூதர்கள்..யார்?
கடவுளின் கட்டளையை மதிக்காமல் அவர் தடை செய்த பழத்தை சாப்பிட்டு பகுத்தறிவு பெற்ற ஆதாம் ஏவாள் இருவரும் “ஏதேன் தோட்டத்தை”விட்டு வெளியேற்றப்பட்டவுடன் …
வெளி உலகத்துக்கு வர்றாங்க …
பல ஆயிரக்கணக்கான வருடங்களில் அவர்களுடைய வாரிசுகள் மனித இனமாக நிலப்பரப்பு முழுக்க பரவுகிறார்கள்.
வேட்டையாடி வாழ்ந்த அந்த காட்டுமிராண்டி மனிதர்களிடையே அநீதி வஞ்சகம் கொடுமை அராஜகம் ஊறிப்போய் ,மோசமான உலகமாகிறது.

ஒரு காலகட்டத்தில் தன்னால் படைக்கப்பட்ட மனிதன் அராஜகமான இனமாக மாறி நிற்பதை பார்த்த “கடவுள்”இந்த உலகத்தை அழிக்க முடிவுக்கு வந்தார்.
அவர்களிலிருந்து நேர்மையான மனிதனாக “நோவா”என்ற மனிதனையும்,அவனது மனைவி,உறவுகளையும்,அடுத்து தான் படைத்த எல்லா உயிர்களிலும் இருந்து ஒன்றை தேர்வு செய்து அழிக்க முடியாத“கப்பல் கூண்டு”செஞ்சு அதுக்குள்ள அடைச்சு முடிச்சவுடன் ,
“ஆழிப் பேரலை” உருவாக்கி எல்லா உயிரினங்களையும் அழித்தார்.
அதேசமயம்…மூடிய கப்பலில் இருந்த நோவாவும்,மற்ற உயிரினங்களும் காப்பாற்றப்பட்டார்கள்….
இன்றைய “ஈராக்”க்கின் நிலப்பரப்பில் …திரும்பவும் “உலகம் “ஆரம்ப நிலைக்கே வந்தது.

நோவா..நீ “என்னை மட்டும் வணங்கி”என் கட்டளைப்படி நடந்தால்,உன் இனத்தை நான் வழி நடத்துவேன் …. (இதுதான் பின்னாளில் இஸ்லாத்தின் இறை கோட்பாட்டனது)
”கனான்”என்ற இறை நிலத்தை என் மக்களான உங்களுக்கு தருவேன் “என்றார் கடவுள்.
இம்முறை ஆதாம் ஏவாள் போலில்லாமல் -கடவுளின் சொல் பேச்சு கேட்டகூடிய விசுவாசியாக “நோவா”இருந்தார்.
அன்று ஆரம்பித்த வழித்தோன்றல்கள் மூலம் மனித உயிரினங்கள் உலகம் முழுவதும் பரவி பல வாழ்வியலில்வளர்கிறார்கள்.

அவருக்குப்பின் வந்த தலைமுறையினர்களில்…
“ஆபிரஹாம்”குறிப்பிடத்தக்கவர்.
தீவிர கடவுள் நம்பிக்கையாளனான அவர் ,கடவுளின் அன்புக்கு உரியவராகவும்,ஹீப்ரு என்ற இனக்குழுவினரின் தலைவராகவும் இன்றைய இருக்கிறார்.அவர் சாரா என்ற பெண்ணை துணையாக்கி,அவள் மூலமாக “ஈசாக்கு “என்ற மகனைப் பெற்றெடுத்தார்.
ஆபிரகாம் கடவுளுடைய தீவிரமான பக்தனாக இருந்தாலும் அவனுடைய பக்தியை சோதிக்க,சொந்த பிள்ளையான “ஈசாக்கை”இறைவன் பலி கேட்டார்.

ஆபிரகாமும் மனமுவந்து தன்மகனை பலி கொடுக்க மலையுச்சிக்கு போனார் …(இன்றுஜெருசலேமில் உள்ள புனித“மொரிய “ மலைதான் அது )கடைசியில் கடவுள் அவருடைய பக்தியை மதித்து-
“ஈசாக்கை”ஆசீர்வதித்து உங்களை நான் வழிநடத்துவேன் என உறுதி கூறுகிறார்.
(இதே மாதிரி …நம்ம ஊரு ஆன்மீக நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வருகிறதா…)

அவர்களுக்கு விவசாயத்தையும்…மிருகங்களை வளர்ப்பதையும் கடவுள் கற்றுதருகிறார்.
ஆனாலும் ….
ஆபிரஹாம் பரம்பரையில் அதற்கு பின் வந்த மனிதர்கள் பலரும்
கடவுளின் கட்டளையை மீறினார்கள்.
பொறாமை,பழிவாங்கல்……என ஒற்றுமையில்லாமல் இருந்தனர்.

ஆபிரஹாமின் பேரனான”ஜேக்கப்” கடவுளையே எதிர்த்து மற்போர் புரிந்தான். என்றாலும் இறுதியில் அவனின் வீரத்தை மதித்து கடவுள் அவனை ஆசிர்வதித்தார்.
இதிலிருந்து அவன் இஸ்ரேயல் என அழைக்கப்பட்டான். “இஸ்ரேயல்”என்பது இறைவனுடன் போரிட்டவன் என்று பொருள்.
இதன் தொடர்ச்சியாகத்தான் “இஸ்ரேயல்”என்ற தலைமுறை உருவானது.
அவர்கள் பின்நாளில் “யூதர்கள்” என அடையாளபடுத்தபட்டனர்.

கடவுளின் குழந்தைகள்..அவரால் வழிநடத்தப்பட்ட இனம் ..என சொல்லப்படும் யூதர்கள்…கடவுள் தந்த நாடு இல்லாமல்….
உலகம் முழுக்க அகதியாக பல ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏன் திரிந்தார்கள்..?
இப்போது இஸ்ரேல் என்ற நாடு உருவானபின்பும்..அங்கு என்னதான் பிரச்சனை..?

வரலாறு தொடரும்…,!

#பொன்வண்ணன் #உலகவரலாற்றுபதிவு2