இலங்கை Frogmouth


இந்த இனம் தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது . அதன் வாழ்விடம் அடர்த்தியான வெப்பமண்டல காடு. இந்த பறவை ஒரு வெள்ளை முட்டை மரத்தின் இடுக்குகளில் போடப்பட்டு இரவில் பெண்ணும், பகலில் ஆணும் அடைகாக்கும். இதன் நீளம் சுமார் 23 செ.மீ. இது பெரிய தலை கொண்டதாக தோன்றுகிறது.
இது தவளை போன்ற உடலமைப்பிலும் நீண்ட தட்டையான அலகினை கொண்டதாக உள்ளது. இது பகலில் மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும்போது பார்க்கும் நமக்கு ஒரு உடைந்த கிளை போல தோன்றும். இதன் நிறம் அதன் பாதுகாப்பிற்கு உகந்ததாக உள்ளது. இரவில் பூச்சிகளை வேட்டையாடும்.
நாங்கள் கிட்டத்தட்ட ஒரு 10 அடிக்கும் குறைவிலான தொலைவிலிருந்து இந்த புகைப்படத்தினை பதிவு செய்தோம். எந்தவித அச்ச உணர்வும் இன்றி எங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது