இருதலை மணியன் அல்லது சிவப்பு உழவன் பாம்பு

Spread the love

இருதலை மணியன்
அல்லது
சிவப்பு உழவன் பாம்பு
நாட்டுப் புறத்தில் இருதலை பாம்பு
Eryx johnii

இப்பாம்புகள் ஈரான்,பாக்கிஸ்தான்,இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

வளர்ந்த இப்பாம்புகள் இரண்டு அடி (61 செ.மீ) நீளம் உடையவை. அரிதாக சில சமயம் மூன்று அடி (91 செ.மீ) உடையதாகவும் இருக்கும்.இந்த பாம்பு வளைகளில் வழக்கூடியது.இதற்கு ஆப்பு வடிவ குறுகிய மூக்கும்,மிகச் சிறிய கண்களும் உள்ளன.உடல் கொஞ்சம் பளபளப்பான செதில்கள் கொண்டு உருளை வடிவில் தடித்த உடலுடன் இருக்கும். இதன் வால் மழுங்கி மொட்டையாக இருக்கும்.இது செம்பழுப்பு மற்றும் சாம்பல் நிறம் அல்லது மஞ்சள்-பழுப்பு நிறத்தில் இருக்கும்.இந்த பாம்புகள் பயந்த, கூச்சம் நிறந்த பாம்பாகும்.இது யாரையும் கடித்ததாக எந்த பதிவும் இல்லை.

இப்பாம்பு ஈரானில் இருந்து பாக்கிஸ்தான் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,இந்தியாவின் மேற்கு, வடமேற்கு,தெற்கில்,தரங்கம்பாடி,தஞ்சை,திருச்சி போன்ற இடங்களில் காணப்படுகிறது.

இப்பாம்பு உலர்ந்த வறட்சி மிக்க சமவெளிகளிலும்,குறுங்காடுகளிலும் காணப்படுகிறது.இது மணற் பாங்கான இடத்தை விரும்புகிறது.

இரவில் இரை தேடக்கூடிய மிகச்சாதுவான பாம்பு இது.பிடிக்கப்போனால் தனது உடலை சுருட்டி தலையை அதன் அடியில் வைத்துக்கொள்ளும்.தன் மொட்டைவாலை ஆட்டி கவனத்தை திசைதிருப்பும்.

இதன் முக்கிய உணவு,எலிகள் போன்ற கொறித்துண்ணிப் பாலூட்டிகள் ஆகும்.

பெண் பாம்புகள் தன் உடலுக்குள்ளேயே முட்டைகளை வைத்திருந்து குஞ்சுகளை உண்டாக்கி ஒரு நேரத்தில் 14 குட்டிகள்வரை பெற்றெடுக்கும்.

இப்பாம்புகளுக்கு முன்பக்கமும் பின்பக்கமுமாக இரட்டைத் தலை உள்ளது போன்ற தோற்றம் காரணமாகவும்,எய்ட்சுக்கு இதில் மருந்து உள்ளது என்ற தவறான நம்பிக்கையாலும் இவ்வகைப் பாம்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்,1972ன் கீழ் இவ்வினங்களின் சட்டவிரோத வர்த்தகம் தடைசெய்யப்பட்டதாகும்.

David’s G R A P H Y