இயற்கை கண்ணாடியில் பிம்பமாய் அழகிய குற்றால மலைகள்

Spread the love

இயற்கை கண்ணாடியில் பிம்பமாய் அழகிய குற்றால மலைகள்.

Bagavathiperumal Karthee B 

பறவைகளை படம் பிடிக்க சென்ற ஒரு அழகிய காலைப்பொழுதில் பறவைகளின் வருகைக்காக காத்திருந்த பொழுது, அங்கே வந்த ஒரு நபர் அந்த குளத்தில், இருந்த பறவைகளையும் சத்தமிட்டு விரட்டிவிட்டார். அவரே அக்குளத்தின் மீன் குத்தகைக்காரர் என்பதை அறிந்த நான், மனதில் எரிச்சலுடன் அமைதியாக சில நிமிடம் இருந்தேன், மீண்டும் பறவைகளின் வரவிற்காக.

அந்த நிமிடம் இடப்பக்கம் திரும்பியபோது அழகான இந்த பழைய குற்றாலம் பாயும் மலைகள் மேகங்களுடன் ரம்மியமாக காட்சியளித்தன. அந்த ரசனையோடு சற்றே குனிந்தால், நீரில் காற்றின் சலசலப்பின்றி இந்த அழகிய காட்சி கண்ணாடி பிம்பமாய் கண்முன்னே.

அடுத்த நொடி விரயம் செய்யாமல் என் கேமராவில் 70 300 mm லென்சை கழற்றிவிட்டு 18 55 mm லென்சை பொருத்தி சில படங்கள் எடுத்து இந்த அற்புதமான பதிவை என்னுடைய தாக்கிக் கொண்டேன்.

தடைகள் பல ஏற்பட்டாலும் நாம் செல்லும் பயணத்தில் நம் பொறுமை புத்தி நம் நம் நோக்கங்களை நோக்கியே இருப்பின் அதற்கான பலனை அனுபவித்தே தீருவோம்.

என் முந்தைய பதிவின் சொன்ன அதுவேதான்.
“நோக்கம் எதுவாக இருக்கிறதோ நாம் அதை அடைந்தே தீருவோம்” அதனுடன் தடைகள் பல கடந்து என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன்.

இயற்கையை என்றும் நேசியுங்கள்.

பழைய குற்றாலம், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு
சென்ற வருடத்தில் ஒரு நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *