இன்சுலின் மாத்திரைகள்

Spread the love

இன்சுலின் மாத்திரைகள்!!

சர்க்கரை நோயால் அவதியுறுபவர்கள் அன்றாடம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது எவ்வளவு கொடிது என்பதை உணர்ந்திருப்போம். இன்சுலினை மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ள முடியாததே காரணம். அவ்வாறு வாய்வழியே எடுத்துக்கொள்ளும்போது, வயிற்றிலிருக்கும் பல்வேறு நொதிகளாலும், புரதங்களாலும், அமிலங்களாலும் இன்சுலின் உணவுக்குழாயின் சுவற்றைக் கடந்து இரத்தத்தை அடைவதற்கு முன்பே சிதைந்து விடும்.

இந்த சிக்கலான ஆராய்ச்சியை உலகின் பலநாடுகள் செய்துவந்தாலும் வெற்றியேதும் கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்க ஹார்வர்டு பல்கலை மருத்துவப் பொறியியல்துறைப் பேராசிரியர் Samir Mitragotri ன் குழு இப்போது மாத்திரை வடிவில் சிறிய ஊசியைத் தயார் செய்திருக்கிறது. இன்சுலின் நிரப்பப்பட்ட சிறு பையுடன் ஒரு பலூனும் சிறு ஊசியும் இணைக்கப்பட்டிருக்கின்றன. மாத்திரையை விழுங்கியவுடன், (உடலின் அமிலத்தன்மைக்குக் காரணமான) கார்போனிக் அமிலத்துடன் (சோடா) வினைப்பட்டு, கரியமில வளியை (கார்பன் டையாக்ஸைடு -CO2) உண்டாக்கும். அந்த CO2 வானது குடுவையில் இருக்கும் மீச்சிறு பலூனை பெரிதாக்கி ஊசிமுனை வழியே வெளியேற முனையும். அப்போது, குடுவைக்குள்ளிருந்து நீளும் ஊசி இரைப்பை அல்லது சிறுகுடலின் சுவற்றில் குத்தி இன்சுலினையும் சேர்த்தே இரத்தத்துக்குப் பாய்ச்சும்.

இன்சுலின்/CO2 இல்லாத அடுத்த வினாடி, ஊசி மீண்டும் பைக்குள் வந்துவிடும். பெப்டைடுகள் எனப்படும் சிறு புரதங்களால் ஆக்கப்பட்ட இந்த சிறு மாத்திரை வடிவ இன்சுலின் பைகள் உடலுக்கு ஏதும் தீங்கு ஏற்படுத்தாமல் கழிவாக வெளியேறிவிடும். பல்லாண்டுகள் பாடுபட்டு இதை உருவாக்கிருப்பதாகப் பெருமைப்படுகிறது பேரா. சமீரின் ஆராய்ச்சிக்குழு. பலகடட சொதனைகளுக்குப் பிறகு விரைவில் உலகெங்கும் வரவிருக்கிறது. உலகம் பேராசிரியர் குழுவுக்கு நன்றி நவில்கிறது.

செ. அன்புச்செல்வன்
10/02/2019

குறிப்பு: உடலின் அமில/காரத்தன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள முதல் பின்னூட்டத்தில் இருக்கும் என்னுடையக் காணொளியைக் காணுங்கள்.

தரவு: https://www.sciencemag.org/news/2019/02/pills-armed-tiny-needles-could-inject-insulin-other-important-meds-directly-stomach