இந்திய பொன்னுத் தொட்டான் Indian Pitta

Spread the love
இந்திய பொன்னுத் தொட்டான் (அல்லது)இந்திய தோட்டக்கள்ளன் (“Indian Pitta) என்பது ஒரு இடைப்பட்ட அளவு கொண்ட மரக்கிளைகளில் வந்து அமரும் வகைப் பறவை ஆகும். இமயமலைக்குத் தெற்கே இது இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் வலசை வரும்.
இது சுலபமாக நம் கண்களில் படுவதில்லை. ஏனெனில், இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த கிளைகள் இடையே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும். இது இரை தேடும்போது தரையிலேயே தத்தித் தத்திச் சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத் தொட்டான் தேவை ஏற்படும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை
இடம்;திருவள்ளுர்

Joymon Vergese 

 

Leave a Reply