FEATUREDNature

Wild Animals Crossing

Spread the love

நீர். இந்த ஒற்றை உயிர்ப்பொருளுக்கு எதிர்வரும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, மெதுவாய் வனசாலையை தினமும் கடக்கின்றன இந்த யானைகள்.

Backlit என்ற வகை புகைப்படம் எடுக்க முனகையில் தான் வானக வெளிச்சத்தின் குரூரம் உணர முடிந்தது. கண்களை பறிக்கும் அளவில் தொடர்ச்சியான இந்த அதித ஒளியை யானைகள் பல நேரம் பொறுத்துக் கொள்வது மிக ஆச்சிரியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

“யானை நிக்குது, போய் துரத்துங்க” என போகிற போக்கில் வெறுப்பை உமிழும் சிலர் வேறு. படம் எடுக்க சிலர். பதறி ஓடும் சிலர் என அந்த இடத்தில் ஒரு சிறு கலவரம் உண்டாக தான் செய்தது. வனத்தை கடக்க, வன எல்லைக்கு உட்பட்ட இடத்தில் உள்ள, வனவிலங்குகளின் இருப்பிடத்தில் செல்கிறோம் என்ற நினைப்பு நம் பலருக்கு இல்லாமல் போனது, பெரிய பாதகம்.

வனத்துறை அதிகாரிகள் என்ன கானகத்தின் எல்லா இடங்களிலும் எப்போதும் நின்றுகொண்டு, மிருகங்களை விரட்டி, வாகனங்களை ஒழுங்குபடுத்தி சீர் செய்யவா முடியும் ? அவர்களும் மனிதர்கள் தான். நம்மை போல அவர்களுக்கும் மனித எல்லைகள் உண்டு. இருட்டுக்குள் ஒரு வன விலங்கின் மேல் உங்களுக்கு என்ன பயம், தயக்கம் இருக்குமோ, அவர்களிலும் அதே இருக்கும்.

யானைகள் கடக்க ஒரு இரண்டு நிமிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தி, ஒளியை குறைத்திருந்தால் போதும். அதை செய்யாமல் தொடர்ந்து முன்னே வருவதை மிருகத்தனமான எண்ணம் என்றே சொல்ல தோன்றுகிறது. அடுத்த முறை நீங்கள் இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவு சற்று புரிய வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி. Calvin Jose

#owl #organisationforwildlife #conservationmessage

Leave a Reply