FEATUREDLatestNature

Pheasant Tailed Jacana

Spread the love

Pheasant Tailed Jacana- இந்தியா முழுவதும் மற்றும் தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் நாடுகளில் காணப்படுகிறது; இவை தாமரை அல்லது அல்லிகள் கொண்ட குளங்களிலும் ஏரிகளிலும் காணப்படுகிறது. அவை பரந்த இலைகள் மற்றும் குளங்கள், ஏரிகள் அல்லது சதுப்பு நிலங்களில் மிதக்கும் தாவரங்களின் மேல் நடந்து செல்வதைக் காணலாம்.

இது நீர்வாழ் தாவரங்களின் வேர்கள் மற்றும் விதைகளை உண்கிறது, மேலும் இது பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகளையும் உணவாக கொள்கிறது . இது ஜூன் – செப்டம்பர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. மிதக்கும் இலைகளில் அதன் கூட்டை உருவாக்குகிறது

இனப்பெருக்கம் செய்யும் பறவைகளுக்கு நீண்ட வால் மற்றும் பழுப்பு நிற அடிபாகத்தையும் கொண்டதாக இருக்கும், இனப்பெருக்கம் செய்யாத பறவைகளுக்கு நீண்ட வால் இல்லை. இதன் இறக்கைகள், தலை மற்றும் முன் கழுத்தில் விரிவான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளன. பின் கழுத்து பொன்னிறத்திலும் நீண்ட கால்விரல்கள் சாம்பல் நிறத்திலும் இருக்கும் இளம் வயது பறவைகள் பழுப்பு நிற மேல்புறங்களைக் கொண்டுள்ளது.

பெண் பறவைகள் இனப்பெருக்க காலத்தில் பல ஆண்களுடன் இணைகிறது. ஒரு சமயத்தில் நான்கு முடடைகள் இடும், ஒரு ஆணுடன் இணைந்தபின் அதன் கூட்டில் நான்கு முடடைகளை இட்டுவிட்டு அடுத்த ஆண் துணையை நாடி பிரிகிறது. அந்த முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகள் பொரித்து அவை வளரும்வரை அனைத்தும் ஆண் பறவைகளின் பொறுப்பாகும். ஆண் பறவை அதன் கூட்டிலிருந்து வெளியே செல்லும்போது அதன் குஞ்சுகளை அதன் இறக்கைகளின் கீழ் பகுதியில் அணைத்துக்கொண்டு பறக்கும் திறன் கொண்டது

Sundar Datacare 

Leave a Reply