General

DTCP அங்கீகாரம் பெறுவது எப்படி

Spread the love

ஒரு மனைபிரிவிற்கு
DTCP அங்கீகாரம் பெறுவது எப்படி?
புதிய ரியல் எஸ்டேட்காரர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய 36 செய்திகள்.

 

1.மனைபிரிவு அமைவிடத்தை பற்றிய விவரங்களை எடுத்துகொண்டு DTCP அலுவலகம் சென்று டீடிசிபி அங்கீகாரம் மேற்படி இடத்திற்கு கிடைக்குமா கிடைக்காதா என்று DTCP ஆபிஸ் இடம் தோராய கருத்துரை வாங்க வேண்டும்.

2.அதாவது மேற்படி இடம் DTCP அங்கீகாரம் தடை செய்யப்பட்ட பகுதியில் வருகிறதா? டிடிசிபியின் LPA லிமிட்டுகுள் வருகிறதா?அல்லது Regional லிமிட்டுக்குள் வருகிறதா? போன்ற கருத்துரை வாங்க வேண்டும்.

3.தடை செய்யபட்ட பகுதிகள் என்பது மயானத்திற்கு மிக அருகில், நீர்நிலைக்கு மிக அருகில் மலைபகுதிகள்,குவாரிகள்,விமான நிலையங்கள்,இரயில்நிலையங்கள் அருகில்,பறவைகள் சரணாலயம்,ரிசர்வ் காடுகள் போன்று ஒவ்வொரு டிடிசிபி மண்டலத்திலும் ஒவ்வொரு விதமாக தடைசெய்யபட்ட பகுதிகள் பதியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

4.அடுத்ததாக மனைபிரிவுக்கான இடம் பஞ்சாயத்து, வட்டார, மாவட்ட,  மாநில, தேசிய சாலைகளுடன் ஒட்டி வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் சிறப்பு, அவ்வாறு வரவில்லை எனில் அரசுசாலைக்கும் உருவாக்கவிருக்கும் மனைபிரிவிற்கும் இடைப்பட்ட தூரத்திற்கு 30அடி சாலை நாமே உருவாக்க வேண்டும்.

5. ஏற்கனவே அரசு சாலை இருந்தால் அது வருவாய்துறை FMB யில் தனி உட்பிரிவு சர்வே எண் கொடுத்து புலப்படம் தனியாக வரைந்து காட்டப்பட்டு இருக்கும்.அரசு சாலை இடத்துடன் ஒட்டி இல்லாத நிலையில் நாமே உருவாக்கும் சாலை உருவாகும்மனைபிரிவிற்கும் அங்கு இருக்கும் அரசு சாலைக்கும் இணைக்கபடும் தூரத்தை FMB யில் தனியாக உட்பிரிவு செய்து வரைபடம் FMB யில் கட் செய்ய வேண்டும்.

6.அடுத்து மனைபிரிவு உருவாகும் இடத்தின் FMB,மற்றும் அதனை சுற்றி இருக்கிற புலபடத்தின் FMB,டோபோ ஸ்கெட்ச்,பட்டா,சிட்டா,அ-பதிவேடு அனைத்தும் VAO வின் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் நகல்கள் பெறவேண்டும்.

7.அரசு வழக்கறிஞர் அல்லது அதற்கு இணையான வழக்கறிஞரிடம் மனைபிரிவு உருவாகும் இடத்தின் ஆவணங்களை கொடுத்து சட்ட கருத்துரை அவருடைய லெட்டர் பேடில் வாங்கவேண்டும்.

8.நல்ல சிவில் என்ஜீனியரை வைத்து மனைபிரிவு FMB க்களை கிளப் செய்து உத்தேச மனை பிரிவிற்கான வரைபடம் வரைந்து கொள்ளனும்.

9.VAO கையெழுத்திட்ட ஆவணங்கள் வழக்கறிஞர் கொடுத்த சட்டகருத்துரையுடன் கூடிய நிலத்தின் ஆவணங்கள் என்ஜினியரால் வரையப்பட்ட உத்தேச வரைபடம் ஆகியவற்றை இணைத்து DTCP ஆபிஸ்க்கு டிடிசிபி அங்கீகாரம் வேண்டி ஒரு மனு எழுதி சமர்பிக்க வேண்டும்.

10.மனு செய்த பிறகு BDO க்கும் மாவட்ட வேளாண்மை அலுவலகத்திற்க்கும் வட்டாட்சியருக்கும் தடையின்மை சான்று (NOC) கேட்டு டிடிசிபி அலுவலகம் forward செய்வார்கள்.அதனுடைய நகல் தங்களுக்கு வரும்.அதனை எடுத்துகொண்டு மேற்படி அலுவலகம் சென்று நாம் பின்தொடரல் செய்தல் வேண்டும்.

11.தாசில்தார் இடம் வாங்க வேண்டிய தடையின்மை சான்றுகள் (NOC):அ).நில உச்சவரம்பு இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
ஆ).நில ஆர்ஜிதம் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).
இ).இதில் புறம்போக்கு நிலம் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).ஈ).இதில் வருவாய்துறை சிக்கல்கள் தடை ஆணைகள் ஏதும் இல்லை என்கிற தடையின்மை சான்று (NOC).

12.மேற்படி சான்றுக்காக தாசில்தார்,துணைதாசில்தார்(D.T) வருவாய் ஆய்வாளர் (RI), கிராம நிர்வாக அலுவலர் (VAO), என்று படிநிலையாக இறங்கி மீண்டும் VAO,RI,DT,தாசில்தார் என படிநிலையாக ஏறி NOC சான்று பெற வேண்டும்.

13.வேளாண்மை துறையிடம் மனைபிரிவு உருவாகும் இடம் ஐந்து ஆண்டுகள் பயிர் செய்யவில்லை என்ற சான்று வாங்க வேண்டும். இதற்காக மாவட்ட வேளாண்மை அலுவலர் இடம் மனு கொடுக்க வேண்டும். அவரிடம் இருந்து ஒன்றிய வேளாண்மை அலுவருக்கு போகும்,

14.வேளாண்மை அலுவலகத்தில் மேற்படி நிலத்தில் பயிர் செய்யப்பட்டதா என்பதற்கான எந்த ஆவணமும் பராமரிப்பதும் இல்லை .ஆனால் உண்மையில் பயிர்பதிவேடு VAO மூலம் வருவாய்துறைதான் பராமரிக்கிறது.(பயிர்திவேடு பராமரிக்காத வேளான்துறையில் சான்று வாங்க சொல்வது அநியாயத்திற்கு மனுசனை சுத்தவிடுவதற்குதான் பேசாம அதையும் வருவாய் துறை NOC யில் சேர்த்துவிடலாம்.)

15.ஒன்றிய வேளாண்மை அலுவலர் வட்டாட்சியருக்கு Forward செய்வார்அவரிடம் இருந்து மண்டல துணை வட்டாட்சியருக்கு போகும் அவரிடம் இருந்து வருவாய் ஆய்வாளருக்கு போகும் அவரிடம் இருந்து கிராம அலுவலருக்கு சென்று அவர் கிராம பயிர் பதிவேடு பார்த்து ரிப்போர்ட் அளிப்பார்.மீண்டும் மேற்படி மனு படிநிலையாக மேல்நோக்கி VAO,RI,DT,தாசில்தாருக்கு போகும்.

16.வட்டாட்சியர் 5 ஆண்டுகள் பயிர்செய்யபடவில்லை சான்று கொடுத்ததும் அதனை வட்டாரா வேளாண்மை அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.அவர் மாவட்ட வேளாண்மை அலுவலருக்கு Forward செய்து Agri NOC கையெழுத்தாகும்

17.அடுத்து வட்டார வளர்ச்சி அவலுவலகம்/பேரூரராட்சி அலுவலகம்/நகராட்சி அலுவலகத்தில் (மனைபிரிவுஇடம் எதன் எல்லைக்குள் வருகிறதோ அந்த அலுவலத்தில்)ஆம்,இல்லை என்ற பல கேள்விகள் அடங்கிய படிவத்தை (டிடிசிபி அலுவலகத்தில் ஒன்று தருவார்கள்)நிரப்பி உரிய அலுவலரிடம் கையெழுத்துபெற வேண்டும்.

18..மேற்கண்ட தாசில்தார் NOC, வேளாண்துறை NOC, ஊராட்சி ஒன்றிய அலுவலர் /பேரூராட்சி/நகராட்சி யின் NOC, ஆகியவற்றை DTCP அலுவலகத்தில் ஒப்படைத்த பிறகு அவர்கள் ரோடு அப்ரூவல் வரைபடத்தை நமக்கு கொடுப்பார்கள்.

19.ரோடு அப்ரூவல் என்பது உருவாக்கவிருக்கும் மனைபிரிவின் உள்ளே எப்படி சாலை போட வேண்டும் என்று ஒரு வரைபடம் தருவார்கள்.அதில் சாலை மட்டுமே இருக்கும் மனை வரைபடம் இருக்காது.அதனை வைத்து நாம் தார் ரோடு அதில் போட வேண்டும்.

20.நமது மனைபிரிவில் இருக்கின்ற போடும் ரோடு அரசு ரோடு உடன் இணைக்கின்ற இடத்தில் Highway Department இல் இருந்து ஒரு NOC வாங்க வேண்டும்

21.அதற்கு அரசு ரோடுடன் நம் மனைபிரிவு ரோடு இணைகின்ற இடத்தை மட்டும் என்ஜினியரை வைத்து ஒரு வரைபடம் வரைந்து மேற்படி இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு சான்று பதிவு துறையில் பெற்று கொண்டு ஹைவேஸ் நிர்ணயிக்கிற கட்டுதொகை கட்டி ரோடு இன்ஸ்பெக்டர் வழியாக ஹைவேஸ் NOC க்கு மனு செய்து வருடந்தோறும் மனு ஒரு சிறுதொகை கட்ட வேண்டும் என்று சொல்லி NOC கொடுப்பார்கள்.

22..பிறகு தார் சாலை போட்டு புகைபடம் எடுத்து DTCP அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.அதன்பிறகு மனைவரைபடம் கொடுப்பார்கள்.அதை வைத்து மனைகளை பிரித்து கற்கள் நட வேண்டும்.

23.அதன் பிறகு மேற்படி சாலையை (பூங்கா போன் பொது இடங்களையும்) அரசுக்கு தான பத்திரம் எழுதி கொடுத்து கொடுக்க வேண்டும். உள்ளாட்சி துறைக்கு தேவையான பராமரிப்பு கட்டணம் கட்டிமேற்படி நகல்களையெல்லாம் DTCP அலுவலகத்தில் ஒப்படைத்தால் அவர்கள் டிடிசிபி அப்ரூவர்டு எண் கொடுப்பார்கள்.

24.மேற்படி மனைபிரிவிற்கு வீட்டு மனைக்கான வழிகாட்டி மதிப்பு பதிவு துறையில் நிர்ணயிக்கபடாமல் இருந்தால் ஒரு கிரய பத்திரம் போட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலை சார்பதிவாளர்,மாவட்ட பதிவாளரின் கேம்ப் கிளர்க்,மாவட்ட பதிவாளர் மூலம் நிர்ணயம்(Fixation) செய்ய வேண்டும்.இதன் பிறகு உங்கள் டிடிசிபி மனைபிரிவு தயாராகிவிடும்.

25.இதே நடைமுறை தான் CMDA அப்ரூவ்டுக்கும் பொறுந்தும் கொஞ்சம் சின்னசின்ன வேறுபாடுகளதானஇருக்கும்.

26.ஒரு DTCP அப்ரூவ்டு வாங்க குறைந்தது 30 அரசு அலுவலர் டேபிள்களுக்கு பைல்கள் நகர வேண்டி இருக்கிறது.

27.டிடிசிபியின் கூடுதல் இயக்குநர்,மாவட்ட வேளாண்மை அலுவலர்,வட்டார வேளாண்மைஅலுவலர்,வட்டாட்சியர்,துணை வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர்,கிராமநிர்வாகஅதிகாரி,சாலை ஆய்வாளர்,ஹைவே இயக்குநர்,சார்பதிவாளர்,உள்ளாட்சி துறை அலுவலர்,மாவட்ட பதிவாளர்களுக்கு சைட் விசிட் கள ஆய்வுக்கு கூட்டி செல்ல வேண்டி இருக்கும்.

28.தாசில்தார் NOC, உள்ளாட்சி NOC, வேளாண் துறை NOC, லீகல் ஒபினியன் மற்றும் ஹைவேஸ் NOC களுக்கு முறையே அனைத்து ஆவணங்களிலும் நோட்டரி பப்ளிக் சான்று தேவைப்படுகிறது.

29.குறைந்தது 3 முறையாவது பொறியாளர் வைத்து மனைப்பிரிவு பிளானை மாற்ற வேண்டி இருக்கும்.

30.மேற்கண்ட அனைத்து வேலைகளையும் செய்ய திறமையான, ஆளுமையான ஏற்ற இறக்கங்களுடன் பேசக்கூடிய, அரசு அலுவலகங்களில் பொறுமையாக காத்திருக்ககூடிய நேர்மறையான வழக்கறிஞர், சர்வேயர், பொறியாளர,அனைத்து அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைக்கின்ற ஒருவர் தேவை.

31.இப்படி தலைமை பண்புள்ள ஒருவரால் குறைந்தது 100 விசிட்டுகளுக்காவது மேற்படி அலுவலகங்களுக்கு அலைந்தால்தான் 7 லிருந்து 8 மாதங்களுக்கு உங்களுக்கு டி.டி.சி.பி அப்ரூவல் கிடைக்கும்.கொஞ்சம் மனிதர்களை கையாளும் திறன் இல்லையென்றால் அலைச்சல்கள் அதிகமாகும்.நேர விரயமாகும்.

32.டிடிசிபி அப்ரூவல் நடைமுறைகள் 1990களில் 2000 களில் 2010 களில் கூட இவ்வளவு இறுக்கி பிடிக்கவில்லை.(அப்பொழுது தொழில் செய்தவர்கள் பாக்கியவான்கள்)

33.உங்களுக்கு டிடிசிபி வாங்கி தருகிறேன் அந்த AD க்கு நான் மச்சான் மாமன் என்று யார் சொன்னாலும் நான் ஆனை பூனை என்னால் செய்து தர முடியும் என்று மேற்கண்ட விதிகள் மீறி யாரும் செய்ய வாய்ப்பில்லை.

34.டிடிசிபி வாங்கி தரும் நடைமுறைகளை மறைத்து வைத்தே புதியதாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கியவர்கள் அனைவரையும் மற்றும் கொஞ்சம் பாசிட்டிவ் எண்ணங்கள் இருக்கின்ற ரியல்எஸ்டேட் அதிபர்களையும் நல்லதே நடக்கும் All is well என்று நம்புகின்ற ஆன்மீக ரியல்எஸ்டேட் அதிபர்களையும் அப்ரூவ்டுக்காகக அலைந்து வேலை செய்ய நேரம் இல்லாத ரியல்எஸ்டேட் அதிபர்களையும் அப்ரூவ்டு வாங்கி தருகிறேன் என்று பல இடைதரகர்கள் மண்ணை கவ்வ வைத்து கொண்டே இருக்கின்றனர்.

35.அதனால் புதிதாய் தொழில் செய்ய வருகிற ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்கள் இடைதரகர்களால் பாதிக்கப்படகூடாது என்றே அனைத்து நடைமுறைகளையும் விரிவாக எழுதி இருக்கிறேன்.

36.புதிதாய் டிடிசிபி மனைபிரிவு அமைத்து தொழில் செய்ய விரும்புகின்ற நண்பர்களுக்கு இது சம்மந்தமாக எப்படி நடைமுறை செலவுகளை குறைப்பது? எப்படி வேகமாக வேலைளை முடிப்பது? போன்ற ஆலோசனைகள் வழிகாட்டுதல்ககள் என்று சிறிய கட்டணத்தில் அரை நாள் வகுப்பு எடுக்க தயாராய் இருக்கிறேன்.

சொத்துக்கள் சேரட்டும்! ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்