FEATUREDFoodHealth

5வகை மீன்களும் அதன் மருத்துவ பயன்களும்

Spread the love

#மீன்_சாப்பிட்டா #மட்டும்_போதாது…

எந்த மீன் எப்ப சாப்பிடனும்,எதற்கு சாப்பிடனும் தெரியுமா.

#5வகை_மீன்களும் #அதன்_மருத்துவ #பயன்களும்

மீன்கள் என்றாலே தனி சுவை உண்டு.

அதிலும் எந்த மீன் எந்தவகை…

எவ்வளவு சுவை என்பது மட்டுமின்றி,
அதனுடைய பயன்பாடு பற்றியும் பார்க்கலாம்.

#வஞ்சிரம்:

பெரும்பாலான ஹோட்டல்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. வஞ்சிர மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன், சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு இது நல்ல மருந்து. வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

#நெத்திலி :

நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

#சுறா:

குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா மீனை புட்டு செய்து சாப்பிட்டால், தாய் பால் சுரக்கும்.

#மத்திமீன்:

ஏழைகளின் உணவு எனப்படும் மத்திமீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த மீன் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. தோல் நோய், மூளை நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் அதை தடுக்கிறது.

#கானாங்கெளுத்தி:

இந்த வகை மீனை அடிக்கடி உண்டால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறையும். அதிலும் வாரம் 4 முறை இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

ந. #சண்முகசூரியன்
இயற்கை வாழ்வியல் நல #ஆலோசகர் மற்றும் காய்கறி #சிகிச்சையாளர்.