FEATUREDLatestNature

வெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவை

Spread the love

நேற்று முன்தினம் மகளுடன் சேலம் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தேன். திடீரென்று நடு சாலையில் இந்த வைரி/வல்லூறுவை பார்த்தேன். அது அமைதியாக உக்கார்ந்து தன்னை நோக்கி வரும் வாகனங்களை பார்த்து கொண்டிருந்தது. பறக்க முயற்சிக்கவில்லை. நான் சற்று தள்ளி வண்டியை நிறுத்தி விட்டு மற்ற வாகனங்களில் அடிபடாமல் இருக்க கைகளை ஆட்டி திருப்பி விட்டு வந்து அதை கைகளில் எடுத்து பார்த்தால், அதற்கு அடி ஒன்றும் படவில்லை. அப்போதுதான் முகநூலில் பெரு நகர நன்பர்கள் வெயிலின் கொடுமை(heat stroke) தாங்காமல் மயங்கிய பறவைகளை பற்றி சொல்லியது ஞாபகம் வந்தது. மகளிடம் தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுக்க சொல்லி சிறிது தண்ணீர் கொடுக்க வைத்து, அதன் மேலும் கொஞ்சம் ஊற்றி ஆசுவாசப் படுத்திய பின் அந்த வைரி பறந்து சென்றது. ஒரு சிறு உயிரை காப்பாற்றிய பெருமிதம் எனது மகளுக்கு. எனக்கோ இந்த பிப்ரவரி மாதத்திலேயே இவ்வளவு வெயிலா என்று ஆச்சர்யம். நாமக்கல் நண்பர்கள் மரம் நடுதலில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களே உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். படத்தில் உள்ளது போல் சிறு சிமெண்ட் அல்லது மண் சட்டியில்(மண் சட்டி என்றால் அடிப்பாகம் மட்டமாக இருக்க வேண்டும்) தினந்தோறும் தண்ணீர் ஊற்றி நிழலான இடத்தில் வையுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும்.🙏🙏🙏🙏

Yoganathan Natarajan 

 

Leave a Reply