FEATUREDNature

வெண்கொக்கு

Spread the love

#வெண்_கொக்கு

#உணவு : நத்தை, நண்டு, தவளை, பூச்சிகளை காட்டிலும் இதனின் பிராதான உணவு மீன்களாகவே திகழ்கிறது

கொக்குகளுக்கு வேட்டையாடும் தந்திரத்தோடு தேர்ந்த பொறுமையும் மறபணுவிலே மிக அதிகம்

#பொறுமை : தன் உணவை அடைய ஒரு கொக்கு அத்துணை பசியிலும் அசையாமல் பல மணி நேரம் பொறுமையுடன் காத்திருக்கும் வல்லமை பெற்றது

#தந்திரம் : கோரை புற்களில் உள்ள சிறிய புழுக்களை கொத்தி நீரில் போட்டுவிட்டு, மீனின் வருகைக்காக அசையாமல் அங்கேயே காத்திருக்கிறது, புழுவை இரையாக உட்கொள்ள மேலே வரும் மீன்களை லாவகமாக லபக்கென்று கொத்தி தூக்கி தனக்கு இரையாக்கி கொள்கிறது

#பழக்கம் :
கொக்குகள் பெரும்பாலும் குளிப்பதை தவிர்க்கிறது, நீர் நிலைகள் ஒட்டிய அதன் வாழ்வாதாரம் இருப்பதால் உடலை குளிர்ச்சி அடைய செய்ய வேண்டிய அத்தியாவசியங்களும் அவைகளுக்கு ஏற்படுவதில்லை

#வேட்டை_நேரம் : அதிகாலை மற்றும் அந்தி மாலைகளிலே இதன் அத்தியாவசிய வேட்டை நேரமாக ஒதுக்கி கொள்கிறது, சூரிய வெப்பத்தால் நீரின் மேலே மீன்கள் தரிசனம் தராததே அதற்க்கான காரணமாக திகழ்கிறது

#பெற்றோர் : இரண்டிலிருந்து நான்கு முட்டைகள் இடக்கூடியவை கொக்குகள், காலையிலிருந்து மதியம்வரை பெண் கொக்கே அடைகாக்கிறது, மதியம் முதல் மாலைவரை ஆண் கொக்கு அடைகாக்கிறது, மீண்டும் இரவு முழுவதும் பெண் கொக்கே அடைகாக்கிறது

தங்கள் சந்ததிகளை உருவாக்கும் அக்கரையும், அன்பும், பொறுப்புகளும் இங்கேயும் பெண்ணுக்கே அதிகம் அளிக்கப்படுகிறது

#ஆபத்து : முட்டைகள், குஞ்சுகளை இரையாக உட்கொள்ள கீரி, நரி, பாம்புகள் அவ்வபோது படையெடுக்கிறது, அப்போது தன் இரண்டு இறக்கைகளையும் கேடயமாக மேலே விரித்து சிலிர்த்து பயமுறுத்தி முட்டைகளையும், குஞ்சுகளையும் அவைகளிடமிருந்து சிப்பாய்களாக காப்பாற்றுகிறது

அன்று ஊரெங்கும் குளம், இன்று ஊரில் எங்கோ ஒரு குளம், தன் அன்றாட வாழ்வை பசியின்றி கடந்த ஒவ்வொரு நாளும் ஒரு கொக்கு செத்து செத்து மடிகின்றது

குளங்களின் பற்றாக்குறையால் தான் வேட்டையாடப்படும் இரை குஞ்சுகளுக்கே பற்றாத போது அவைகளுக்கு மட்டும் எவ்வாறு பற்றிவிடும்

நிலக்கூறு வியாபாரிகளால் இன்று ஒவ்வொரு பறவையின் வாழ்க்கையும் நீர் குமிழிகள் போல் ஆகிவிட்டது

பறவைகள் பெருகுவதும், அழிவதும் விதியின் பிடியில் இல்லை, மனிதனின் பிடியிலே இருக்கிறது

“பாவப்பட்ட பிறவிகள் பறவைகள்”

-அருண்🌷pandichery

 

Leave a Reply