LatestNature

மாங்குயில்

Spread the love

ராஜா சார் பாட்டுலயே பட்டித்தொட்டி லாம் பிரபலமான பறவைகள்ள இதுவும் ஒன்னு.மாங்குயில் சங்க இலக்கியங்களிலும் வங்கா என்னும் பெயரில் இடம்பெற்றுள்ளது.பசுமை தோய்ந்த மஞ்சள் நிறத்தை உடலின் மேற்பகுதியும், உடலின் கீழ்ப்பகுதி மங்கிய பழுப்புக்கீற்றுகள் நிறைந்து வெளுத்துக் காணப்படுவதால் இது பெண் மாங்குயில் என அறியமுடிகிறது.ஆண் மாங்குயிலா இருந்தா உடல் முழுவதும் பளபளப்பான மஞ்சள் நிறமாகவும், இறக்கைகளும் வாலும் கருப்பாகவும், கண்வழியே கருப்புப் பட்டையும் இருக்குமாம்.

ஆறு,ஏரி கரையோரமாவும், அரசமரத்திலும், இலையுதிர்க்காடுகளிலும் இதனை பெரும்பாலும் பார்க்க முடியுது.இந்த நிழற்படம் கூட ஏரிக்கரையோரமா இலையுதிர்ந்த மரத்துல நிற்கும் போது படம்புடுச்சது தான்.கரிச்சான் பஞ்சுருட்டான் மற்றும் அக்காகுருவிகளோட சேர்ந்த மாதிரி தான் சுத்திட்டு தன்னோட இரையை தேடுது.பழங்களையும் புழு பூச்சிகளையும் தேடி சென்று சாப்டுது.ஆனா தரைப்பக்கம் மட்டும் வர்றதே இல்ல.டேஞ்சரஸ் ஃபெல்லோஸ் இந்த மனிதர்கள் னு கரெக்ட்டா நெனச்சுடுச்சு போல.

அப்பப்ப லொ லொ, லொ ப்பி னு குரலிட்டு யாருக்கோ சிக்னல் கொடுக்குது.அந்த சிக்னல் மத்தவங்களுக்கு கேட்டுச்சோ இல்லையோ எனக்கு கேட்டதும், காலடி ஓசையின்றி மறஞ்சு மறஞ்சு என்னமோ தீவிரவாதிகள தேடி போய் மறைவிடத்துல இருந்து துப்பாக்கிய நீட்டி குறி வைக்குற ஆர்மி மேன் மாதிரி படவில குறி வைத்து எடுத்தாச்சு.ஒருமுறை பெரிதுபடுத்தி பாருங்கள் அதன் அழகினை.

வங்கா – மாங்குயில் – மாம்பழக்குருவி – மாம்பழப்பட்சி – பறவைநூலார் | அய்யப்பாக்கம் | சென்னை | தமிழ்நாடு

INDIAN GOLDEN ORIOLE | EURASIAN GOLDEN ORIOLE | ORIOLUS | AYYAPAKKAM | CHENNAI | TAMILNADU

Leave a Reply