LatestNature

மலை இருவாச்சி

Spread the love

Great Horn bill
மலை இருவாச்சி

பறவைகளுள் ஆச்சரியமூட்டும் வடிவ அமைப்பும் கண்ணைக் கவரும் வண்ண மும் கொண்ட பறவைகளே இருவாச்சிப் பறவைகள். உலக அளவில் 56 வகையான இருவாச்சிகளும் இந்தியாவில் 9 வகையான இருவாச்சிகளும் தென்னிந்தியாவில் நான்கு வகையான இருவாச்சிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இருவாச்சிப் பறவைகளுள் மிகவும் பெரியதும் கருப்பு வெள்ளை வண்ணங்களுடன் இறக்கைகளில் மஞ்சள் வண்ணப் பட்டைகள் அமையப் பெற்றவைகளே மலை இருவாச்சிகள். ஆங்கிலத்தில் இவை Great Indian Hornbill என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன.

Hornbill என்ற பெயர்க்காரணத்தைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்ற போதிலும் கொம்பு வடிவிலான அலகுகளையுடைய பறவை என்ற பொருளில் அமைந்த பெயராக எடுத்துக் கொள்வதே சிறந்ததாக அமையும் ( Horn – கொம்பு, bill – அலகு)இருவாச்சிகளின் அலகு பொதுவாக கொம்புகள் போன்று வளைந்து .. பார்ப்பதற்கு அழகாகக் காட்சி சருகின்றன. இவற்றுள் மலை இரு வாச்சியின் அலகு மஞ்சள் ஆரஞ்சு ஆகிய வண்ணங்கள் இணைந்து அழகூட்டப்பெற்றுள்ளது .அலகு தலையோடு இணையும் பகுதியில் தொப்பி போன்ற அமைப்பு காணப்படுகிறது. சிறகிலும் வாலிலும் வெண்ணிறப் பட்டைகள் காணப்படுகின் றன. சிறகில் அமைந்துள்ள மஞ்சள் வண்ணப் பட்டைகளைப் பறக்கும் போது மட்டுமே தெளிவாகக் காண முடியும். அலகும் தலையும் இணையும் இடத்தில் கருப்பு வண்ணப் பட்டை அமைந்துள்ளது . ஆண் பெண் வடிவ, வண்ண வேறுபாடு கிடையாது. ஆதே நேரத்தில் பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட சற்று சிறியவை. ஆண் பெண் பறவைகளின் கண்களின் நிறம் வேறுபட்டதாக அமைகிறது.. ஆண் பறவைகளின் கண்கள் சிவப்பு வண்ணத்திலும் பெண் பறவைகளின் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமையும். கண்களை வைத்து முதிர்ச்சி அடைந்த பறவைகளை அடையாளம் காணலாம். மலை இருவாச்சிகள், மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகள், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம், திபத்து, பூட்டான், தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இலங்கையிலும் இவை அடையாளம் காணப்பட வில்லை. உயரமான மரங்களைக் கொண்ட மழைக் காடுகளே இவற்றின் வாழிடங்களாகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன அழிவு இவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. ஐக்ய நாடுகள் சபையின் IUCN அமைப்பு இவற்றை அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாக அறிவித்துள்ளது. (Vulnerable (IUCN 3.1)

மலை இருவாச்சிகள் கேரளா மற்றும் அருணாச்சல் பிரதேசத்தின் மாநிலப் பறவையாக அறிவிக்கப் பட்டுள்ளன. அருணா ச்சலப் பிரதேசப் பழங்குடிகள் சூடும் கிரீடம் போன்ற அமைப்பில் இருவாச்சிப் பறவைகளின் இறகுகளைக் காணலாம். கேரளாவைப் பொறுத்த வரை இவற்றின் பெயர் மலை முழக்கி வேழாம்பல் என்பது ஆகும். பறக்கும் போது மலையும் அதிரும்படியாக முழக்கம் செய்து பறக்கும் பறவை என்பதே இதன் பொருளாகும். இதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

இருவாச்சிப் பறவைகள் பொதுவாக உயரமான வண்ணமுடைய மரங்களைத் தேர்ந்தெடுத்து மரப் பொந்துகளில் கூடுகள் அமைக்கின்றன. பெண் பறவைகள் கூட்டில் ஏறிய பிறகு ஆண் பறவைகள் கூட்டின் துளையை மண் போன்ற பொருட்களைப் பயன் படுத்தி அடைக்கிறது . பெண் பறவையின் அலகு வெளியே தெரியும் அளவிற்கு ஒரு சிறிய துளை மட்டுமே காணப்படும் விதத்தில் துளை அடைக்கப் படுகிறது. முட்டை விரிந்து குஞ்சாகி அடையை விட்டு வெளிவரும் வரை பெண் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் ஆண் பறவையே இரை தேடித் தருகிறது. முட்டை விரிய 38 முதல் 40 நாட்கள் தேவைப் படுவதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் தூவல் அற்றவையாகவும் அகோரமான வடிவம் கொண்டவையாகவும் காணப் படுவதாகக் குறிப்புகள் உண்டு.

இருவாச்சிகள் பொதுவாக தரைக்கு வருவதில்லை. மரம் சார்ந்து வாழ்தலே இவற்றின் சிறப்புகளாகும்.அபூர்வமாக எப்போதாவது மண் குளியல், இரைதேடல் போன்றவற்றிற்காக தரைக்கு வருவதும் உண்டு. பழங்கள் தளிர் இலைகள் ,சிறு சிறு பூச்சிகள் ஓணான் பல்லி, மலை அணில், மற்ற பறவைகள்,அவற்றின் குஞ்சுகள், முட்டைகள்,போன்றவையே இருவாச்சிகளின் உணவாகும். இவற்றின் நாக்கு மிகவும் கூட்டையாக அமைந்திருப்பதால் உணவுப் பொருட்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்தோ அலகு வழியாக நகர்த்தியோ விழுங்குகின்றன.
காடே அதிரும்படியான ஒலியை இவை ஏற்படுத்துகின்றன. கோக்… என்ற சப்தத்தில் தொடங்கி கோக்….கோக் கொக்கோக்… என்ற முறையில் நீளுகிறது. தகரத்தால் ஆன டப்பாவில் அடித்து ஓசை ஏற்படுத்துவது போன்று இதன் ஒலி அமைந்துள்ளது.
இரு வாச்சிகள் மலைக் காடுகளின் அடையாளம் ஆகும். காடுகளைப் பாதுகாப்பது நமது கடமையும்

Leave a Reply