FEATUREDLatestNewsSocialmedia

பாராட்டுதலுக்குரிய பணியும், இப்போதைய தேவையும்

Spread the love

பாராட்டுதலுக்குரிய பணியும், இப்போதைய தேவையும்

நேற்று காலையிலிருந்து இப்போதுவரை புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை, அதிரம்பட்டினம், மதுக்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகளை பார்த்து வந்திருக்கிறோகிறோம்.

கஜா புயலால் தாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் ஆட்களோடு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மின்துறை பணியாளர்களை அரசு நியமித்துள்ளது. தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து எளிய உணவுண்டு மின்துறை பணியாளர்கள் கொட்டும் மழையிலும் பணி செய்து வருவது பாராட்டுதலுக்கு உரியது. சேதம் கூடுதலாக இருப்பதால் மின்சாரம் கிடைக்க சில பகுதிகளில் ஒருமாதம்கூட ஆகலாம்.

கொட்டும் மழையில் வெளியூர் துப்புறவுப் பணியாளர்களும், இதர அரசு துறைகளைச் சேர்ந்த பணியாளர்களும் அலுவலர்களும் செய்துவரும் பணி பாராட்டப்பட வேண்டியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்கள் பல இடங்களில் அங்கன்வாடிகளாக இருப்பதால் மிகச்சிறியதாக உள்ளன.

நிவாரண முகாம்கள் பல, அரசு தொடக்க – நடுநிலைப் பள்ளிகள் என்பதால் ஓட்டு கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதால் மக்கள் மழையிலும் குளிரிலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குச்சிகளை ஊன்றி தார்ப்பாய்களைக் கொண்டு போர்த்தி அதன்கீழ் மக்கள் கூட்டாக மழையில் சமைப்பதை காணும்போது ஏதோவொன்று நெஞ்சை பிசைகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் மண்டபங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு அனுமதித்தால் மக்கள் பாதுகாப்பாக தங்கிக்கொள்ள இயலும் (சில பகுதிகளில் தனிநபர்கள் தாமே முன்வந்து இதனை செய்துள்ளனர்), தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதற்கான வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

பெரும்பாலான இடங்களில் உதவிகள் சென்றிருந்தாலும், இன்னமும் உதவிகள் கிடைக்காதவர்களும் தாக்குபிடித்து இருக்கிறார்கள்.

அடுத்த நகர்வுக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சூழல் உணர்த்துகிறது.

அது..

1.உடைந்த ஓடுகளை சரி செய்ய பழைய ஓடுகள் வேண்டும்.

2.கீற்று வீடுகளுக்கு கீற்றுகள் வேண்டும், இப்பகுதியில் 6 மாதத்திற்கு முன் கீற்று கிடைக்க வழியில்லை, வெளியில் இருந்து வரவேண்டும்.

3. மாடுகளுக்கு வைக்கோல் போன்ற தீவனங்கள் வேண்டும்.

இவைகள் நோக்கி நகருவதே பாதிப்பில் இருந்து விரைவில் வெளிவர உதவும்.

facebook : ஏங்கல்ஸ் ராஜா