FEATUREDLatestNature

நீளவால் இலைக்கோழி-Pheasant-tailed Jacana

Spread the love

நீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி (Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus)

Panneerselvam Natarajan 

நீளவால் தாழைக்கோழி அல்லது நீளவால் இலைக்கோழி (Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus) என்பது நீர்நிலைகளிலும், நன்னீர்குளங்களிலும், தாமரைத்தடாகங்களிலும், அல்லிக்குளங்களிலும், நதித்துவாரங்களிலும் காணப்படும் ஓர் பறவை இனம். இப்பறவையினம் மிதக்கும் தாவரங்கள் அருகும் நீர்நிலைகளை விரும்பி வாழும். மிகவும் நீண்ட கால் விரல்களினால் மிதக்கும் இலைகளின் மேல் நடக்கும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலும் இவை ஓடும் நதிகளைத் தவிர்ப்பதையும் காண இயலும், ஏனெனில் ஓடும் நீரில் பயிர்கள் பல்கிப் பெருகுவதில்லை. தாவரங்களின் மீது நடக்கவும் ஓடவும் விருப்பப்பட்டாலும், கால்விரல்களின் நடுவினில் சவ்வு இல்லாவிடினும் இவற்றால் மிகவும் நன்றாக நீந்தவும் முடியும்.

மிகவும் எளிதாக அடையாளம் கொள்ளக்கூடிய பறவை இனம் இது. எனினும், ஆண் பெண் என்று இரு பாலினங்களுமே வெறுபாடின்றி ஒத்த நிறத்துடன் காணப்படுகின்றன. எனினும் புணரும் காலங்களில் மிகவும் வண்ணமயமாக காணப்பெறுகின்றன. இரண்டு காலங்களிலும் கீழ்த்தாடை மற்றும் மார்பகப்பகுதிகள் வெண்மை நிறம் கொண்டிருக்கும்

நான்கு முதல் ஆறு மாத காலம் வரை புணரும் காலத்தோற்றத்தோடு காணப்பெறுகின்றன. வெண்மார்பின் குறுக்கே ஒரு கருப்பு வரி உருவாகும். வால் நீண்டு கருத்த வண்ணம் கொள்ளும். இந்த உடலின் குணத்தின் காரணமாகவே இவ்வகைப் பறவைக்கு அதன் பெயர் வந்தது. கழுத்தின் பின்புறம் தங்க நிறத்தில் பட்டை ஒன்று தோன்றும். முகம் முழுதும் வெள்ளை நிறம் தொன்றும். தங்கமும் வெண்மையும் சேருமிடம் குறுகிய கருப்பு வரி ஓடக்காணலாம். இறகுகளின் இறுதியில் வெள்ளை நிறம் தோன்றும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் தொன்றும். இறகுகளின் மீதிருந்த செம்மஞ்சள் நிறம் கருத்த சாம்பல் நிறம் கொள்ளும்.

சாதாரண நேரங்களில் சிறகுகளில் தங்கம் பொன்ற செம்மஞ்சள் நிறம் மெலோங்கி இருக்க கரும் புள்ளிகள் தென்படும். தெளிவான ஓரு கருங்கோடு அலகு பின்புற நுணியில் தொடங்கி தோள்பட்டை வரை செல்லும். தலையின் உச்சியில் கருப்பு வண்ணம் உண்டு. கழுத்தின் பின்புறம் தங்கப்பட்டை மறைந்து விட்டு இளஞ்சாம்பல் நிறங்கொள்ளும்.

by

https://www.facebook.com/paneer.selvam.16?__tn__=%2CdC-R-R&eid=ARADgS-8nVXT7OhpmGB2cuOxnACv6yC8MmN2MbZ9-OwXz614PiLf08uaxtPjHn3k1-Jt1qFi2j0uBUtq&hc_ref=ARRqmU2TRtyXXXf0jew2Y8Z9fT7ORrdCRZbxkSTeQ5WExDYNokhNLld7pk4OP_OnBDY&fref=nf

Leave a Reply