LatestNatureTravel

தினம் ஒரு பறவை – குக்குறுவான்கள் – Part 1

Spread the love

குக்குறுவான்கள்

Kalai Selvan

இன்று நாம் காணவிருப்பவை குக்குறுவான்கள்.

மூன்று வகை குக்குறுவான்களை நீங்கள் எளிதில் கண்டு இனங்காணலாம்..

1.Brown Headed Barbet…
காட்டுப் பச்சைக் குக்குறுவான்…

2.White – cheeked barbet..சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்.

3.Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்.

“குட்ரூ….குட்ரூ….குட்ரூ…..”

என எங்கிருந்தோ காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது உங்களுக்கும் குரல் கேட்டிருக்கும்….

இங்க ஒருத்தன் கத்துனா, கொஞ்ச தூரத்துல இன்னொருத்தன் பதில் குரல் கொடுப்பான்…

ஆனால் இவன்தான் என நீங்கள் பார்த்திருக்க / அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என தெரியவில்லை…

காட்டின் எல்லையை நாம் மிதித்து விட்டோம் என்பதற்கு அடையாளம் இவன் குரல்…

அதுதான் Brown Headed Barbet…

காட்டுப் பச்சைக் குக்குறுவான்…

Brown Headed Barbet
Brown Headed Barbet…
காட்டுப் பச்சைக் குக்குறுவான்., பெலாப்பாடி, சேலம்..

ஆங்கிலப் பெயருக்கேற்றபடி தலை பழுப்பு நிறம்..
கண்ணைச்சுற்றியுள்ள தடித்த (இடைவெளியில்லாத தொடர்ச்சியான) மஞ்சள் வட்டம் இதன் தனித்த அடையாளம்…

அலகு பாத்தோம்னா வெளிர் சிகப்பு..இறக்கையின் இறுதிப்பகுதியும், வாலும் நல்ல பச்சை நிறம்..(தமிழகக்) குக்குறுவான்களில் இது அளவில் பெரியது.

Brown Headed Barbet… காட்டுப் பச்சைக் குக்குறுவான். ஏற்காடு, சேலம்.
brownheadedbarbet-salem
Brown Headed Barbet…காட்டுப் பச்சைக் குக்குறுவான்., மஞ்சள் நிற கண் வளையம்..தனித்த அடையாளம்
குக்குறுவான் வசித்திருந்த ஒரு மரப்பொந்து
குக்குறுவான் வசித்திருந்த ஒரு மரப்பொந்து

 

சின்னக்குக்குறுவான்

இதேபோல மலைப்பகுதியில் காணப்படும் இன்னொரு குக்குறுவான், சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்..White – cheeked barbet..

கண்ணுக்குக் கீழ் கன்னப்பகுதில் அமைந்த வெண்மைப் பகுதி இப்பெயர் வரக்காரணமாயிற்று…மெல்லிய வெள்ளை நிறப் புருவமும் உண்டு..கவனிக்க …இவை தொடர்ச்சியின்றி இருக்கும்..

அதாவது முன்பு பார்த்த காட்டுப் பச்சை குக்குறுவான் போல கண்ணைச்சுற்றிலும் மஞ்சள் வளையம் இதற்கு வராது…

எனவே மேற்கண்ட இரண்டை மட்டும் வேறுபடுத்த கற்றுக் கொள்ளுங்கள்…போதும்..ஏனெனில் இந்த இரண்டும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடியவை…

White - cheeked barbet..சின்னக்குக்குறுவான்
White – cheeked barbet..சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்., பெலாப்பாடி, சேலம்..
கன்னத்தில் உள்ள வெள்ளைக் கோட்டை கவனிக்க
white cheeked barbet
White – cheeked barbet..சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்.,பிலியூர், ஏற்காடு, சேலம்..
கன்னத்தில் உள்ள வெள்ளைக் கோட்டை கவனிக்க.

 

செம்மார்புக் குக்குறுவான்..

மூன்றாவதாக நீங்கள் காணவிருப்பது செம்மார்புக் குக்குறுவான்..

பெயருக்கேற்றபடி மார்பில் சிவப்பு நிறம்..தொண்டைப்பகுதியில் மஞ்சள் நிறம்..தலைப்பகுதியில் கொஞ்சமாய் சிவப்பு..அலகு கருப்பு நிறம்…கண்ணின் மேலும் கீழும் வெண்கன்ன குக்குறுவானுக்குச் சொன்ன அதே அமைப்பில் மஞ்சள் நிறம் இதற்கு…அவ்வளவே!

Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்., ஏற்காடு, சேலம்.

நீல நிறம் மட்டும் இவன் உடம்பில் இருந்திருந்தால் அழகில் இவனை அடித்துக் கொள்ள யாரும் இல்லை..உடல் நிறம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கவரும் பச்சை இல்லை என்றாலும் மற்ற வண்ணங்கள் இப்பறவைக்கு அழகூட்டுகின்றன..

குக்…குக்…குக்…குக்….என இதன் ஓசையை சாதாரண சமவெளிப்பகுதியிலேயே நீங்கள் கேட்டு ரசிக்கலாம்..

செம்மார்பு குக்குறுவான்
Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்., ஏற்காடு, சேலம்.

 

coppersmith-barbet-salem
Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்., கொட்டச்சேடு, சேலம்.
Coppersmith-Barbet-mettur
Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்.,மேட்டூர், சேலம்.

 

coppersmith barbet
வாயே திறக்காம கத்துவான்…அப்போ நெஞ்சுப் பகுதியில் இந்த மாதிரி புடைப்பு வரும் பாருங்க

 

செம்மார்பு குக்குறுவான்
Coppersmith Barbet.
செம்மார்பு குக்குறுவான்., ஏற்காடு, சேலம்.

 

 

இமயமலையில் காணப்படும் பெரும் குக்குறுவான் (Great Barbet) இந்தியாவிலேயே பெரிய குக்குறுவான் ஆகும்..

 

பெரும் குக்குறுவான்

அதேபோல் இமயமலையில் காணப்படும் பெரும் குக்குறுவான் (Great Barbet) இந்தியாவிலேயே பெரிய குக்குறுவான் ஆகும்..

மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் மலபார் குக்குறுவான் முகத்தில் அதிக அளவில் சிவப்பு நிறம் கொண்டிருக்கும்…

தமிழகத்தில் அனைவரும் முதலில் நான் சொல்லியுள்ள 3 வகை குக்குறுவான்களையும் எளிதாக காணலாம்..

மேற்சொன்ன மூன்றுமே கூடுகள் கட்டுவதில்லை..பெரும்பாலும்பட்டுப் போன காய்ந்த மரங்கள், சில இடங்களில் உயிருள்ள மரங்களிலுள்ள காய்ந்த நிலையிலுள்ள கிளைகளில் பொந்து அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன..

அம்மாப்பேட்டை குமரகிரி ஏரிக்கரையில் அமைந்த ஒரு வாகை மரக்கிளையில் அமைந்த பொந்தில் , செம்மார்புக்குக்குறுவானொன்று ஓடி ஓடிச் சென்று சிறு புழுக்களை எடுத்து வந்து பிள்ளைகளுக்கு ஊட்டுவதை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தேன்…

பறவைத்தேடலில் எப்போது ஏற்காடு, கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்றாலும் மூன்று நண்பர்களையும் பார்க்காமல் தேடல் முற்றுப் பெற்றதில்லை..

கொண்டலாத்தி என்னும் நூலில் திரு.ஆசைத்தம்பி அவர்கள் குக்குறுவான் பற்றி அழகாய் இப்படி எழுதி இருப்பார்..

ஒற்றைக் கிளையில்
உச்சிக் கிளையில்
நீ

காலம் தொடங்கிய நாள்
முதலாய்
உன் அலகிலிருந்து ‘குக் குக் குக்’ சொட்டிச் சொட்டி
நிரம்பித் தளும்புகிறது காற்று

நீ போய்விட்ட பிறகும்
உன் கிளையிலிருந்து சொட்டும்
உனது ‘குக் குக் குக்’
காலம் முடியும்வரை

ஒவ்வொரு சொட்டாய்ச்
சொட்டிசொட்டி
இறுதிச் சொட்டில்
வெளியேறிவிடும்
எல்லாம்..

அப்பா! என்னவொரு ரசனை இருந்தால் இப்படி கவிதை வடிக்க முடியும்?

அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடன்,
கலை,
from kaadugal 

Leave a Reply