FEATUREDLatestNature

செம்பருந்து கருடன்

Spread the love

🚥#செம்பருந்து
#கருடன்
#பிராமினி_கைட்
#கரும்பருந்து
#பறையா_கைட்🎭

செம்பருந்தென்று ஒரு பதிவையும்
அதன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தபோது ஒரு நண்பர் முன்னிரு சொற்பயன்பாட்டையும் தவிர்த்துவிட்டு இது
பிராமினி கைட் தானே என்று கேட்டிருந்தார்…

அதற்குத் தனியாக ஒரு பதிவே எழுதிவிடலாமென இதை எழுதுகிறேன்…

செம்மண் நிறத்தையும் அடிவயிறு முதல் தலைவரை வெண்மை நிறத்தையும் கொண்ட இப்பருந்தை
#செம்பருந்து என்று தமிழில்
அழைப்பதே சரியானதாகும்…

பிறகு ஏன் #கருடன் என்ற சொல்லாடல் ?

ஆம்…
கரியநிறத் திருமாலின்
வாகனமாக இந்த செம்பருந்தையே
இந்துசமயத்தின் வைணவப்பிரிவில்
இன்றுவரை பார்க்கிறார்கள்…

எங்கள் ஊரான
#காரமடையின்
#அரங்கநாதர்_திருக்கோயில் #சொர்க்கவாசல் திறப்பின் போதும்கூட கருடனாகிய இப்பறவை கோபுரத்தை வந்து சுற்றிய பின்னரே சொர்க்கவாசல் நடையைத் திறப்பார்கள்…
இதனைப் பலரும்
கண்ணாறக் கண்டதுண்டு ..

#கருடன் என்ற பெயரோடு
நின்று போயிருந்தால் இதை வேறு
எந்த விளக்கத்திற்கும்
நாம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது..
அது மதத்தோடு நின்றுவிட்டது என்று
தள்ளிவிடலாம்..

ஆனால், அந்த சொல்லாடல்
#பிராமினி_கைட் என்று ஆங்கிலத்திற்குச்
செல்லும்போதுதான் நமக்குப்
பல தகவல்களையும்
பின்புலங்களையும்
தருகிற வரலாற்றை ஆராயவைக்கிறது…

பொதுவாகவே ,
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலகட்டங்களிலும் அதற்கு முன்னும் பின்னும் கூட சாதியின் பெயர்களைத் தழுவிய இவ்வாறான பெயர்களைப் பறவையின்பெயர்களோடு நீங்கள் வாசித்தும் கடந்திருக்கலாம்…

நூறு முதல் இருநூறு ஆண்டுகளுக்குள்
இவ்வகையான பெயர்ச்சூட்டல்கள் நிகழ்ந்திருக்குமென்று
நாமும்கூட சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறதுதானே….

ஊர்ப்பருந்துகளான இவற்றை எவ்வாறு செம்பருந்து என்று அழைக்கிறோமோ அதே போலத்தான் கரும்பருந்தும்…
ஆனால், அதற்குப்பெயர்
#பறையா_கைட் என்றும் கள்ளப்பருந்தென்றும் பெயர் …
இது இரு இனத்தைக் குறிக்கின்ற சொல்லன்றி வேறென்ன இருக்க முடியும்…

மேல்சாதியினரைக் குறிக்க ஒரு இனமும் கீழ்சாதியினரைக் குறித்த ஒரு இனமும் எனப் பறவைகள் வரைப் பரவிப்போயிருக்கும் இதற்கெல்லாம் பறவைகளிடமா விளக்கம் பெற முடியும்…
அவற்றுக்குத் தெரியுமா ?
இதுதான் தம் பெயரென ?

பொதுவாக ஆங்கிலேயர் காலத்தில் இவ்வாறான பெயர்ச்சூட்டல்கள் நிகழ்ந்து பின்னர் அது பொதுவழக்காக மாறிப்போயிருக்கிறது என்பதை உணர்வோம் நண்பர்களே…!

இன்னும் பதிவை நீளமாக்கினால்
அது பதில்பதிவை
வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்செல்லும்
என்பதை உணர்ந்து சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்…

கீழே கேரளத்தில் எடுக்கப்பட்ட செம்பருந்துகளின் புகைப்படத்தைப் பதிவிட்டிருக்கிறேன்..
கரும்பருந்து புகைப்படத்தை யாரேனும் புகைப்படமாக எடுத்திருந்தால் பதிவிடுங்கள்….

ஏதேனும் தவறுகள் இருந்தால்
தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். விளக்கங்கள் பெறவும் காத்திருக்கிறேன்….

கா.ர.ப

Neethi Doss இதுபோன்று பல பறவைகளுக்கு தவறான புரிதலில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பாக நேரடியாக ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யும் பெயர்கள்.
பறவை ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் பறவைகளின் பண்புகள்,வாழும் முறை ஆகியவற்றிற்கேற்பவும்
தமிழ் இலக்கியத்தில் பறவைகளின் பெயர் குறித்த சொல்லாடலையும் கருத்திற்கொண்டு பறவைகளின் பெயர்ப்பட்டியல் தமிழில் தயாரித்தல் அவசியமான ஒன்று. ஒரு பறவைக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்களும் வட்டாரப்பெயர்களும் இருக்கலாம்…ஆனாலும் வரிசைக்கிரகம் செய்வது நன்றாயிருக்கும் என்பது எனது கருத்து.
கள்ளப்பருந்து என்பது சரியல்ல #கரும்பருந்து என்பதே சரி.

Maya Devar தமிழகப்பறவைகள்
இதன் தூய தமிழ் பெயர்
கலுழன்
.
கலுழ் – அழுகை
கலுழ்தல் – கண்ணீர் கசிவது
கலுழன் – கருடன்
(கருடன் கண் கலங்கிய வண்ணம் காட்சியளிப்பதால் – காரணப் பெயராம்)
.
.

கலுழ்தல் = கலத்தல்.
கலுழ் – கலுழன் = வெண்டலையும் செவ் வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை.
.
.
கலுழன்
(வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம்..
(தமிழ்அகராதியில் …
.
.
கலுழன் மேல் வந்து தோன்றினான் –
-கம்ப இராமாயணம் ).–
.
கலுழன் : கருடன்; a kind of kite

.

கலுழன்- வ. கருட(garuda). திருமால் படை

செம்பருந்து

David’s G R A P H Y

 

Maya Devar இராசேந்திரன் அழகப்பன் ———————-செம்பிராந்து, செம் பருந்து என்று கிராமங்களில் சொல்வார்கள்

Leave a Reply