FEATUREDLatestNature

குழந்தைகளுடன் பறவைகள் காணல் மற்றும் இயற்கை நடை

Spread the love

குழந்தைகளுடன் பறவைகள் காணல் மற்றும் இயற்கை நடை!
சோழிங்கநல்லூர் சதுப்பு நிலம்.
01 மார்ச்சு 2020

நமது “பறவைகள் சூழ் உலகு” குழுவின் மூலம் இந்நிகழ்வு கடந்த ஞாயிறு காலை சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் சதுப்பு நிலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் எழுபதிற்கும் மேலான குழந்தைகள் இயற்கை நடையில் ஆர்வமாக கலந்து கொண்டு சூழல் பல்லுயிர் குறித்து பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டார்கள் 🌿

இயற்கை நடையில் காலை 7 முதல் 9 வரை குழந்தைகளுடன் சோழிங்கநல்லூர் மற்றும் காரப்பாக்கம் சதுப்பு நிலத்தில் அவதானித்த பல்லுயிர்கள்:-

பறவைகள்:-

1) தாழைக்கோழி குஞ்சுகளுடன்
2) நீலத்தாழைக்கோழி
3) மஞ்சள் மூக்கு நாரை
4) சாம்பல் நாரை
5) செந்நீல நாரை
6) நத்தைக்குத்தி நாரை
7) சின்ன கொக்கு
8) குளத்துக் கொக்கு
9) சிறிய நீர்க்காகம்
10) இந்திய நீர்க்காகம்
11) செம்மூக்கு ஆள்காட்டி
12) கருப்பு வெள்ளை மீன்கொத்தி
13) நாகனவாய்
14) காகம்
15) நீலவால் பஞ்சுருட்டான்
16) கூழைக்கடா
17) கதிர் குருவி
18) சாம்பல் கதிர் குருவி
19) தையல் சிட்டு
20) மண்கொத்தி
21) வெண் புருவ வாலாட்டி
22) ஊசி வால் வாத்து
23) மீசை ஆலா
24) பாம்பு தாரா
25) நெடுங்கால் உள்ளான்
26) கிளி
27) உன்னிக் கொக்கு
28) தட்டைவாயன்
29) வெண்புருவ வாத்து
30) வெண்மார்பு மீன்கொத்தி
32) நெடலைக்கொக்கு

பட்டாம்பூச்சிகள்:-

1) வெந்தய வரியன் ~ Plain tiger
2) வயப்பொறி கருஞ்சி ~ Striped tiger
3) அறல்படு பழுசி~ Common castor
4) சேயுடல் கருஞ்சி/ராசா பட்டான் ~ Crimson Rose

தட்டான்கள்:-
1) ஓவியச் சிறகன் ~ Picture wing
2) Scarlet skimmer
3) Granite ghost
4) தேன் தட்டான் ~ Ditch Jewel

ஊசித் தட்டான்கள்:-
1) Coromandel marsh dart

நீர் தாவரங்கள்:-
1) வைலம்
2) அசோலா
3) வேலக்கீரை
4) சம்பை/எருவை
5) பெரு வைலம் ~ Spirodela polyrhiza
6) முற்பாசி
7) நீர் பொன்னாங்கண்ணி
8) நீர் கருவேளம்
9) அந்தரத் தாமரை
10) கோரைப் புல் வகைகள்
11) நீலாம்பல் ~ நெய்தல்
12) முட்டைப்பாசி (Salvinia sp)

சாலை ஓர நில தாவரங்கள்:-
1) ஆமணக்கு
2) மருதாணி
3) நெய்வாளை கடுகு
4) சீமை அகத்தி
5) பொன்னாங்கண்ணி
6) உமரி
7) தேள் கொடுக்கு பூடு
8) எழுத்தாணிப் பூடு
9) ஊமத்தை
10) முடக்கத்தான்
11) சிறு பூனைக்காலி

சாலையோர பாரத்த அயல்நாட்டு மரங்கள்:-
1) சவுன்டல்
2) சீமைக்கருவேளம்
3) சீமை வாகை

காரப்பாக்கம் சதுப்பு நிலத்தில் பார்த்த நாட்டு மரங்கள்:-

1) நீர் மருது
2) மூங்கில்
3) பூவரசு
4) நாட்டுக்கருவேளம்
5) புங்கை
6) நாவல்
7) வேம்பு

இத்துடன் மூன்று வகை நத்தைகள், ஒரு வகை ஓனான், மூன்று வகை சிலந்தி, குளவி, பட்டாம்பூச்சி புழு, கட்டெறும்பு, நீர் மிதவை சிறு பூச்சிகள் என பல்லுயிர்களை இந்நடையில் குழந்தைகளுடன் காலையில் கண்டு இயற்கையின் அங்கங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது பெரு மகிழ்ச்சி. ஓர் மன நிறைவான நிகழ்வு 🌿 இயற்கையோடு இணைந்து தற்சார்பாக தொடர்ந்து பயணிப்போம் 

Deepak Venkatachalam,

#மகிழ்வித்துமகிழ்
#பறவைகள்சூழ்உலகு

Leave a Reply