FEATUREDLatestNature

ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம்

Spread the love

Ranganathittu BirD SanCtuarY..

0.67 சதுர கிலோமீட்டர்களால்
#1940_இல்
#மைசூரின்_மகாராஜாவால்
ஏற்படுத்தப்பட்டது
ரங்கனத்திட்டு
பறவைகள்
சரணாலயம்…..!🦃

பறவைகளின் காதலன்
#சலீம்_அலியின்
கேமராவுக்கும்
தாகத்திற்கும்
இலை பரிமாறிய
அன்றைய வரலாறு
கொண்ட இடமிது….!🐣

#1600_ஆம்_ஆண்டுகளில்
அப்போதைய
மைசூரின் மன்னர்
கண்டீரவ நரசராஜ வொடீயார்
காலத்தில் ஏற்படுத்திய்
#தடுப்பணையின்
#பகுதியில்
இது உள்ளது…🐦

மைசூரின்
#மாண்டியா_மாவட்டம்
#சீரங்க்கப்பட்டணாவின்
#தாலுக்காவின்
அதி அற்புதப் பகுதி…!💓

Common Hoopee

Common kingfisher

White breasted kingfisher

Coppersmith barbet

Indian peafowl

Large green brown headed barbet

Pied kingfisher

White cheeked barbet

Stork Billed Kingfisher

Common sandpiper

Spot Billed kingfisher

Great stone curlew

Cattle egret

Black winged kite

Black crowned night heron

Common lora

Darter

Great tit

Grey wagtail

Black headed white ibis

Open billed stork

Spoon bill

Indian Myna

Painted stork…..

எத்தனையெத்தனை பறவைகள்….💞

துடுப்பு கிழிக்க ஆரம்பித்ததும்
முன் வந்த முதலை உட்பட
அத்தனை நொடிகளும்
வேற்றுலகத்தில்
வாழ்ந்ததற்கான
திக் நொடிகள்…

பறவைகளின்
சீழ்க்கை ஒலி….
நதி கிழித்தோடும்
படகுச் சத்தம்
மட்டுமே
எங்களிடம்…..

ஜனவரி மாதங்களில்
சென்று பாருங்கள்….
பறவைக் கூட்டங்களால்
பார் ஆனதுபோல்
தோன்றும்…

கூட்டைத் தவிர
எதையும்
சொத்தெனக் கொள்ளாத
பறவைகளின்
பால பாடம்
காதல் இணைகளைக்
கொண்டாடும்
பேறு காலம்….
குஞ்சுகளைப் பராமரிக்கும்
அட்டகாச
அக்கறையுணர்வு….

தூக்கணாங்குருவியை விட
சிறந்த
சிவில்
எஞ்ஞினியர்கள்
இருக்கிறார்களா ?

பொறுமைகாத்து
உற்று நோக்குங்கள்…..

பறவைகள் பலவிதம்….
நிச்சயமாய்
அவை
ஒவ்வொன்றும் ஒருவிதம். !

இயற்கையின் கைகளில்
எல்லாமே
பிரம்மாண்டம் தான்….
மனித கால்கள்
என்று படுகின்றனவோ…
அன்று அது
ஆறாத் துயரத்திற்கு
ஆறுதல் தேடுகிறது…!

#ரங்கனத்திட்டு🐦
#சீரங்கப்பட்டணம்
#மைசூர்

கா.ர.ப

Parameswaran Rangaraj 

Leave a Reply