LatestNature

பச்சோந்தி ஏன், எவ்வாறு நிறமாறுகிறது

Spread the love

பச்சோந்தி ஏன், எவ்வாறு நிறமாறுகிறது
*******************************************

பச்சோந்தியும் (Chameleon) வேலி ஓணாணும் (Calotus) வேறு, வேறு இனம். பச்சோந்தி எந்த நிறத்தில் ஒட்டுகிறதோ அந்த நிறத்திற்கேற்ப தன் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் என்பது தவறு. பச்சோந்தி அவ்வப்போது பழுப்பு, மஞ்சள், பச்சை என 3 நிறங்களில் மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளும்‌.

அதாவது தோலின் செல்கள் (Pigment) ஒரு பக்கம் சுருங்கும் போது, சுருங்காத பக்கமுள்ள நிறமிகளின் அளவு கூடுதலாகி நிறம் மாறுகிறது. தன்னைப் பாதுகாத்திட முயலும் போது பழுப்பு நிறமும், அச்சத்தில் மஞ்சள் நிறமும், இருட்டில் பச்சை நிறமும் தோன்றுகிறது. நத்தை, ஆமை போன்றவற்றைப்போல எல்லாப் பச்சோந்திகளும் மிக மெதுவாகவே இயங்குகின்றன. ஒடத்தெரியாதால் இந்த தற்காப்பு உருமறைப் பரிணாமம் மிக மிக இன்றியமையாததாக உள்ளது.

இடம் : மசினகுடி
#Masinagudi
#Chameleon

Leave a Reply