FEATUREDGeneralLatest

செக்குமேடு

Spread the love

செக்குமேடு– இந்த இடத்தைபுதுவையில் 50 வயதை கடந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த பகுதிக்கு சென்று வந்தவர்களை மக்கள் வேறுமாதரியான கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள். அந்த இடம் பிரஞ்சுகார்ர்கள் ஆண்டபோத மரசெக்கு வைத்து எண்ணை ஆட்டிய இடங்கள். அதனால்தான் அந்த இடத்திற்கு செக்குமேடு என பெயர். தற்போதைய DAT இருக்கும் பகுதி மற்றும் நியூடோன் தியேட்டர் பின்பகுதி. கீழே உள்ள படம் அந்தபகுதியில் இருந்த செக்கு . இப்போதும் அந்த பகுதியில் ஆயில்மில்அதிகமாக உள்ளது.

மணிலாஎன்றுஅழைக்கப்படும் வேர்க்கடலை அமெரிக்காவிலிருந்தும், 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் ஐரோப்பா கண்டத்திற்கு கொண்டு வந்து 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்திய துணைக் கண்டத்தில் நிலக்கடலை அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலும், மலபார் கடற்கரையை அடைந்த மணிலா வகைகள் மொசாம்பிக்கிலிருந்து வந்தன, அதே நேரத்தில் கோரமண்டல் கடற்கரையை அடைந்த மணிலா வகைகள் பிலிப்பைன்ஸிலிருந்து வந்தன.
இது நீண்ட காலமாக மல்லட்டாய் அல்லது மல்லகோட்டை என்று உச்சரிக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உற்பத்தியின் உச்சத்தில், நிலக்கடலை பாண்டிச்சேரியின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 10%, நெல் (60%) மற்றும் கரும்பு (12%) க்கு பின்னால் மூன்றாவது இடத்தில் இருந்தது.

1857 ஆம் ஆண்டில், பாண்டிச்சேரியிலிருந்து பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வேர்க்கடலை மதிப்பு 2.2 மில்லியன் பிராங்குகள். 1883 வாக்கில், அந்த எண்ணிக்கை 8.4 மில்லியனாக உயர்ந்தது, 1891 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு வேர்க்கடலை ஏற்றுமதியின் மதிப்பு 12.9 மில்லியன் பிராங்குகளை எட்டியது. பிரான்சில், வேர்க்கடலை – எண்ணை இரண்டும் உணவுக்கு பயன்பட்டது மற்றும் எண்ணெய் சோப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டன, இது மார்சேய் சோப்பின் கலவையில் பயன்படுத்தப்பட்டது.

புதுவையில் இருந்து அதிக அளவில் மணிலா எண்ணை செக்கில் ஆடி பிரான்சுக்குஏற்றுமதி ஆனது. இளம் வயதில் இந்த செக்கு சுற்றும் போது அதில் உட்கார்ந்து செல்ல செக்குமாட்டை ஓட்டுபவரிடம் காசு கொடுத்துவிட்டு ஏறி உட்கார்ந்து கொள்வோம். புதுவையில் சில வருடங்களுக்கு முன்பு மணிலா, நுங்கு, மற்றும்பனங்கிழங்கு விற்பவர்கள் கூவி குறல் எழுப்பும் ராகம் புதுவை மண்ணிற்கே உறிய கலாச்சார சிறப்பு.இப்போது அதுபோன்று குரல் எழுப்பி விற்பனை செய்தால் தெரிவியுங்கள் .அதை பதிவுசெய்யவேண்டும்

1930 ல் இருந்த புதுச்சேரி படங்கள் Pondichéry Histoire et Littérature. Merci

Ramalingam Varadarajulu

Leave a Reply