FEATUREDHealthNews

சூரியனே பட்டையைக் கிளப்பு

Spread the love

சூரியனே பட்டையைக் கிளப்பு: (மரு.விக்ரம்குமார்)

இயற்கையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கலாம் என்று இருக்கிறேன். ’வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்க வேண்டும்’ என்பதே அந்த முக்கியமான வேண்டுகோள்! எதற்காக தெரியுமா? அடிக்கிற வெயில்ல… அது போடுற சூட்டுல, ஒரு பயலும் வீட்டுக்கு வெளியில வரக்கூடாது என்பதற்காகத் தான். சமாளிக்க முடியல சில மக்கள!…

’இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கம்’ என கடந்த ஆண்டுகளில் நிறைய செய்திகளைப் படித்திருப்போம்! அதைவிட பல மடங்கு வெயிலின் தாக்கம் இருந்தால் தான் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்குவார்கள் என நினைக்கிறேன்! அரசமர அடியில் ஐந்தாறு பேர் கூட்டம்… சாலை ஓரங்களில் நான்கைந்து பேர் கூட்டம்… இயற்கையே! அரச மர இலைகளை சில வாரங்களுக்கு உதிர்த்துவிடு!… சூரியனே தார்ச் சாலையில் சூட்டைக் கிளப்பிவிடு!… அறிவில்லா மக்கள் சிமெண்ட் வீடுகளுக்குள் தஞ்சமடையட்டும்! (தலைப்பைப் படித்ததும் வெயிலின் தாக்கத்தால் கொரோனா ஓடிவிடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்… ஆனால் அறிவியல் பூர்வமாக அப்படி சொல்லிவிட முடியாது…)

உழைப்பில்லா மாணவப் பருவ வாழ்க்கை வாழ்ந்த பொழுது, ’ஓடி ஆடி விளையாடுங்கடா… இல்லைனா உடற்பருமன்… நீரிழிவு, அதிகுருதியழுத்தம்… இப்படி தொற்றா நோய்கள் எல்லாம் எட்டிப்பார்க்கும்’ என்று சொன்ன பொழுது, செல்போன்லயும் லாப்-டாப்பிலும் உக்கார்ந்தே காலம் போக்கிய பயலுக எல்லாம், இன்றைக்கு பேட்டையும், பந்தையும் தூக்கிட்டு கூட்டமாகத் திரியுது! என்ன செய்வது!…

இன்னும் சில நடுத்தர வயதினர், உற்சாகமாக வாக்கிங் போவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு இந்த முகங்களையெல்லாம் நான் பார்த்ததே இல்லை! உடல் உழைப்பு சில நோயினருக்கு அவசியம்… போங்க… வீட்டுக்குள் அல்லது மாடியில் இப்போதைய சூழலில் போங்க!… அதிலும் கூட்டாக வாக்கிங்!…

விலகலற்ற சமூகமே!… விலகி நில்!…

-Dr.விக்ரம்குமார்.,MD(S)

Leave a Reply