FEATUREDGeneralஅறிவியல்

சமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே

Spread the love

#பருவநிலை_மாற்றம்
#வளர்ச்சி

சமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே என்னனு தெரியுங்களா?

என்ன நீராவி பத்தின சம்பந்தம் தான?

ஆமா…சாதரணமா வெட்டவெளியில விறகடுப்புல சமைக்கறப்ப சூடே தெரியாது. ஒரு அடைச்ச சின்ன அறைக்குள்ள சமைச்சா வைத்து ஊத்தது. சூடு வெளிய போக முடியாம அறைக்குள்ளயே தங்கிடுது. இது போல தான பருவநிலை மாற்றமும் நடக்குது?.

அட ஆமாம், நீராவி சூட்டை எடுத்து வெளியேறும் போது தண்ணி குளிர்கிறது. குண்டாவுல சமைக்கும் போது இந்த சுழற்சி நடந்து அரிசி மெதுவா வேகும். இதுவே பிரசர் குக்கர்ல வேகும் போது நீராவி அழுத்தத்தாலும், சூடு வெளிய போக முடியாததாலும் சூடு மிக வேகமாக அதிகமாகி அரிசி சீக்கிரம் வெந்துடும். இது தான் இப்ப நடக்குது.

CO2, நீராவி, நைட்ரஸ் ஆக்சைடு, மீதேன், ஏசில இருந்த வர ரசாயன காத்து எல்லாமே பிரசர் குக்கர் பண்ற வேலைய பண்ணுது. வெப்பத்த அண்டவெளிக்கு போறத தடுத்து பூமிய தொடர்ந்து சூடாவே வைக்குது.

எல்லா வெப்பமும் வெளிய போயிட்டா இங்க குளிர் தாங்க முடியாதே?

உண்மை தான். அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான? இந்த வாயு எல்லாம் நம்ம தொழில் புரட்சிக்கு முன்னாடி ஒரு சமநிலையில் இருந்துச்சு, எல்லா சுழற்சியும் உயிர்கள் வாழ நிலைத்து இருந்துச்சு.

தொழில் புரட்சி என்ன பண்ணுச்சு அப்படி? மனித குலம் இவ்வளவு முன்னேற்றம் அடைஞ்சு இருக்கே?

எல்லாம் பேராசை தான். முதலில் உணவு வணிகத்துக்கு காடு அழிப்பு. அப்புறம் நிலக்கரி எரிப்பு, கச்சா எண்ணை எரிப்பு. இது இல்லாம தொழில் புரட்சி சாத்தியமா?

இல்ல….

இப்படி எரிப்பதால மேல சொன்ன பசுமை குடில் வாயு அளவு காத்துல தாறுமாறா எகிறிடுச்சு. ஒரு மெல்லிய, காத்து போற அளவுக்கு இருந்த போர்வைய மிக அடர்த்தியான கம்பளியா மாத்திட்டோம். அத போத்தினா என்னாகும்?

மூச்சு முட்டும்….காத்தோட்டம் இருக்காது, வைத்து ஊத்தும், சூடு தாங்க முடியாது.

இது தான் மொத்த பூமிக்கும் இப்ப நடக்குது?

ஆமா…ஆனா இதை குறைக்க என்ன வழி?

அடுப்ப நிறுத்தினா சோறு கிடைக்காது. ஆனா பிரசர் குக்கர்ல சமைக்கறத நிறுத்தலாம்ல?

புரியல…

அடுப்பு — சூரியன். பிரசர் குக்கர் — பசுமை குடில் வாயு. இந்த வாயுக்களோட அளவை குறைக்கனும். தொழில் புரட்சிக்கு முன்னாடி இருந்த அளவுக்கு கொண்டு போகனும்.

அதுக்கு என்ன பண்ணணும?

வளர்ச்சிங்கற பேர்ல நிலக்கரி, கச்சா எண்ணை, நவீன விவசாயம், நவீன கால்நடை வளர்ப்பு, காடு அழிப்பு எல்லாத்தையும் உடனடியா நிறுத்தனும். அப்படி நிறுத்தினா குக்கர் வெடிக்காம இருக்கும்.

மாற்று சக்தி?

அது கரிமத்த மட்டுமே பத்தி பேசுது. மாற்று சக்தியால ஒரு இரும்பு உருக்காலைய நடத்த முடியுமா?

முடியாது…

ஆனா உருக்காலை இல்லாம நாம வாழ முடியுமா?

முடியுமே? நம்ம ஊர் ஆசாரி தான அருவா, கடப்பாறனு அடிச்சு குடுத்தார்?

அப்ப அது தான் தீர்வு. பெறு நிறுவன, பகாசுர உருக்காலைய விட்டுட்டு உள்ளூர் தற்சார்பான ஆசாரி கிட்ட போறது மட்டுமே நாம பிழைக்கறதுக்கான வழி.

ஆனா மேற்கத்திய நாடுகள் அறிவியல், தொழில்நுட்பம் பத்தியே பேசாறங்களே?

அவங்க அறிவு அவ்வளவு தான்.

Leave a Reply