சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லகூடாது

Spread the love

சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ள நிலையில் சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லகூடாது என்பதனை தெளிவுபடுத்துகிறேன்.

சபரிமலைக்கு வீம்புக்குப் போவேன்னு சொல்ற பெண்மணிகள் தாராளமா போயிட்டு வாங்க! உங்க வயித்தில வளர்ந்து வந்தா அந்தப் பிள்ளை இந்த தேசத்துக்குச் சாபம் தான்.

சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமயம் கோர்ட்டில் பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வேண்டி வழக்கு நடைபெற்றுதீர்ப்பு வந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்பதே உண்மை. ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் இருக்கும் பெண்களே அனுமதி மறுக்கப்படுகிறது.

குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?

யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.

கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு.

அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?

இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல…

சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும்.

கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் “அபாணா” என்ற ப்ராணனுக்கானது. அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது.

இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என கேட்பது முட்டாள் தனம். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உரிமை கேட்பதற்க்கு சமம்.