FEATUREDLatestNature

காட்டுச் சிலம்பன் Jungle babbler

Spread the love

காட்டுச் சிலம்பன்.
Jungle babbler
Argya striata
காட்டுச் சிலம்பன்.
இது இந்தியாவில் காணப்படும் ஒரு பறவை இனமாகும் .இவை பொதுவாக 6 முதல் 10 பறவைகள் ஒன்றாக இருப்பதினால் ஆங்கிலத்தில் இதனை ஏழு சகோதரிகள் (seven sisters) என்று அழைக்கப்படுகிறது. இவைகள் பொதுவாக காடுகள் , விவசாய நிலங்கள், நகர்ப்புறங்கள் என எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இவற்றை காணாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். எப்பொழுதும் பிளாப்ளா என்று ஒலி எழுப்பி கொண்டிருப்பதனால் babbler என்று பெயர் பெற்றிருக்கலாம். இது வலசைப் பறவை அல்ல. ஒரே இடத்தில் வாழும் தன்மை கொண்டது.


பொதுவாக தம் குழுவுக்கு என்று சிறு எல்லை வகுத்து வாழும் தன்மை கொண்டது. நீண்ட நாள் உயிர்வாழும் பறவைகளில் ஒன்றாகும். சுமார் 16.5 வருடங்கள் வரை கூண்டில் வாழ்ந்துள்ளது. இரையாக பூச்சிகள், தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ளும்.மரக்கிளைகளின் நடுவே கூடுகட்டி வாழும்.ஒவ்வொரு ஊரிலும் இப்பறவைக்கு பல வழங்கு பெயர்கள் உள்ளது. தங்கள் ஊரில் இப்பறவையின் பெயர் என்ன ?

bhupathi.vignesh

 

Leave a Reply