FEATUREDLatestNature

இளம் வெளி மான்கள் – Black Buck

Spread the love

இளம் வெளி மான்கள். இரலை. Black Buck
Calvin Jose 

பெரும்பாலான விலங்குகளில் ஆண்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதி தங்கள் பலத்தை வெளிப்படுத்தி வெற்றிபெறும் பட்சத்தில் கூட்டத்தை தன் வசப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். சந்ததிகளை பெருக்கும் வழி விலங்குகள் வாழ்கையில் பெரும்பாலும் ஒரு இரத்த சரித்திரமே. கொம்புகள் உடையும், காயங்கள் ஏற்படும், சில சமயம் உயிர் கூட போகலாம்.

படத்தில் காணப்படும் இந்த மோதல் சற்றே சாதுவானது. சொல்லப்போனால் இது ஒரு முன்னோட்டம் போல. மெதுவாக கொம்புகளை இணைத்து, பலமாக மோதாமல் ஒன்றை ஒன்று தள்ளி தங்கள் வலிமையை சோதனை செய்து கொள்கின்றன. நிஜ மோதல்களில் ஆக்ரோஷம் மிகுந்திருக்கும்.

இது மான் இனமல்ல. இரலை இனம். Antelope. இதனை ஆங்கிலத்தில் “பிளாக் பக்” (Black Buck) என்று அழைப்பர். அழிந்து வரும் உயிரினங்களில் முக்கியமான ஒன்று. மிகக் குறைவான எண்ணிக்கையில் வெகு சில பாதுகாக்கப் பட்ட இடங்களில் மட்டுமே தற்போது பிழைத்திருக்கின்றன. சமவெளி காடுகளின் புல்வெளிகள் இந்த மான்களின் உறைவிடம். அத்தகைய இடங்கள் அனைத்தையும் நாம் நம் வாழ்க்கைக்காக அபகரித்து விட்டோம்.

உலகின் 70% இடங்களை மனிதர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தியாவில் 20% மட்டுமே. குறைந்த அளவே இருந்தாலும் அள்ளித் தருகின்ற குணம் காடுகளுக்கு உண்டு. குடிக்க, வாழ, பயிர் செய்ய, தொழில் செய்ய நீரும், சுவாசிக்க நல்ல காற்றும் நமக்கு தருவது காடுகள் அன்றி வேறு எவரும் அல்ல. இயற்கை தனக்கென ஒரு வழியை உருவாக்கி செயல்படுகின்றது. அதன் வழியில் அது செயல்பட உதவவே அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கை சமனில் நம் மனித இனம் அளப்பரிய ஆற்றல் கொண்ட, மேலும் இயற்கையை மெருகேற்றி அழகுபடுத்த திறன் வாய்ந்தது. ஆனால் நாம் செய்யும் எந்த ஒரு செயலும் இயற்கையை நோகடிக்கும் போக்கிலேயே அமைந்துள்ளது.

இதை மாற்ற இந்த குழு பயன்படும் என்று நினைக்கிறேன். படித்தவுடன் அடுத்த பதிவை நோக்கி ஓடாமல் ஒரு நிமிடம் நீங்கள் இயற்கைக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை முறைகளை சிறிதளவேனும் மாற்றியமைக்க முயற்சி எடுங்கள். காடுகள் அதன் வேலையை செவ்வனே செய்யும். நாம் அதன் மேல் சுமையை அதிகம் வைக்கதிருந்தால்.

சிறந்த எதிர்காலத்தை, உயிற்சூழலை தனிமனித நன்முயற்சிகளிலேயே கட்டமைக்க முடியும். முயலுங்கள்.

நன்றி.

CALVIN JOSE

https://www.facebook.com/calvinjose.87?__tn__=%2CdC-R-R&eid=ARCL9JAHb0hXQbUg8wqnMQMND8QvLCPutiPdOlwSsYB7ExnlAVYyyp_xzvT7hYXijDUHc5Q0gHIiJyLd&hc_ref=ARSFNn_zszPkdxzqWftOBhw1FSNYR3aNGcMfnmaR5sORazHipY1cPVjaS4ebqedZghw&fref=nf

Leave a Reply